28 மாவட்டங்களில் திமுக தோற்பதற்கு திமுகவினரே செயல்படுகின்றனர் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…அரசியல் செய்தியா?

ஆமாம் தலைவா,…உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல், தனி அலுவலர் உள்ள மாவட்டங்களில் ஆளும் கட்சியினரின் அராஜகம் கொடி கட்டி பறக்கிறது.

நானும் கேள்வி பட்டேன்.அரசு அதிகாரிகள் எல்லாம் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வருகிறது ஒற்றரே…

நூறு சதவீதம் சரி…ஒன்றிய பொறுப்பில் உள்ள திமுகவினர் வட்டார அதிகாரிகளை வாட்டி வதைக்கின்றனர்.சில திமுகவினர் மாவட்ட அதிகாரிகளை கூட மரியாதை இல்லாமல் பேசி வருகின்றனர் தலைவா…

ஆமாம் ஒற்றரே…பல மாவட்ட அதிகாரிகள் எங்களை அதிகாரம் இல்லா மாவட்ட பதவிகளுக்கு இடமாற்றம் செய்துவிடுங்கள் என கோரிக்கை வைத்து வருவதாக தகவல் கிடைக்கிறது.

ஒரு ஒன்றிய அதிகாரி சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர்விட்டு கதறி உள்ளார்.அவர் போன்ற அதிகாரிகள் மன அழுத்தத்தால் விபரீத முடிவுக்கு வருவதற்கு முன்பு, ஆட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும்.இல்லையேல், 2026 தேர்தலில் திமுக தேறுவது கடினம் தலைவா…

பொதுமக்கள் நெருக்கமாக உற்று நோக்கும் ஊராட்சி நிர்வாகத்தில் அராஜகம் தொடர்ந்தால், திமுகவின் தோல்விக்கு அந்த கட்சியினரே காரணம் ஆவார்கள் ஒற்றரே…

சரியாக சொன்னீர்கள்…இந்த விடயத்தில் ஆளும் கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திமுகவின் வெற்றி கேட்டை திண்டுக்கல் போட்டு பூட்டி விடலாம் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  தலைவர் பிறந்த நாளில் கொரொனா தடுப்பு உறுதிமொழி