இடமாறுதல் சிக்கல் உயிர் பலி வரை சென்று விட்டதாம் ஒற்றரே…
ஆமாம் தலைவா…ஒன்றியத்திற்குள் கவுன்சிலிங் உடன் இடமாறுதல் என ஆணையர் போட்ட ஆணையை பிடிஓ க்கள் மதிப்பதில்லையாம்.அரசியல்வாதிகள் சிபாரிசு, தனது தனிப்பட்ட காரணத்திற்காக இடமாறுதல் ஒரு உயிரை பறித்துவிட்டது.
எங்கே ஒற்றரே…
தஞ்சாவூர் மாவட்ட மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிதாதன் என்பவரால் ஸ்டாலின் என்ற ஊராட்சி செயலாளர் உயிரை இழந்ததாக செய்தி. அதில் உள்ள உண்மையை துறைரீதியாக விசாரித்து தண்டனை வழங்கவேண்டும் என கூக்குரல் கேட்கிறது தலைவா..
இதற்கு என்ன தான் முடிவு ஒற்றரே…
கவுன்சிலிங் உடன் கூடிய இடமாறுதலை அனைத்து இடங்களிலும் கண்காணிக்க குழு அமைத்திட வேண்டும். இந்த விடயத்தில் ஆணையர் உறுதியான உத்தரவை இடவேண்டும் தலைவா…
உயிர் பலி ஏற்படாமல் தடுக்க வேண்டும் ஒற்றரே…
இடமாறுதல் உத்தரவை நெறி படுத்த நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு சங்கம் தயாராகி வருகிறதாம் தலைவா.எப்படியோ நல்லது நடந்தால் சரி என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.