விழிப்புணர்வு
நாம் ஏற்கனவே கிராம சபை கூட்டமும்,நூறு நாள் திட்ட போராட்டமும் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு பொதுமக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தோம்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த ஆரம்பித்தார்.
கிராம சபை கூட்டத்தை போராட்ட களமாக மாற்றுவது தவறு என்று அந்த ஊராட்சியை சேர்ந்த பெண்மணி ஒருவர் அமைச்சரிடம் விவாதம் செய்துள்ளார். எவ்வளவோ முயன்றும் அந்த பெண் சமாதானம் ஆகாததால் அமைச்சர் அந்த இடத்தை விட்டு சென்றார்.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இனியும் அரசியல்வாதிகள் தங்கள் கட்சி நடத்தும் போராட்டத்தை பொது களத்தில் திணிக்காதீர்கள். நூறு நாள் திட்ட சம்பள பிரச்சனையை தனி ஒருநாளில் வைத்திருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது.
அரசியல்வாதிகளே ஜாக்கிரதை
ஊராட்சிகளின் பதவிகள் கூட கட்சி சார்பில்லாது சுயேச்சையாக போட்டியிடும் வகையில் பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் உள்ளது.ஆகவே…ஊராட்சிகளில் அரசியல் விளையாட்டை எந்த கட்சிகளும் செய்யக் கூடாது. இன்று விருதுநகரில் நடந்தது, நாளை நாடு முழுவதும் பரவும்.
போராடிய பெண் பாஜக கட்சியை சேர்ந்தவராம்.ஆனாலும், திமுக,பாஜக என எந்த கட்சியும் கிராம சபையில் அரசியலை புகுத்துவது. மாபெரும் தவறு.