கிராமசபை கூட்டம்
- இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி)
- தொழிலாளர் நாள் (1, மே)
- இந்திய விடுதலை நாள் (15, ஆகஸ்டு)
- காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்)
- உலக நீர் நாள் (மார்ச் 22)
- உள்ளாட்சி நாள் (நவம்பர்)
என ஆண்டுதோறும் ஆறுமுறை கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.
அதன்படி, மார்ச் 22ம் தேதி நடக்க வேண்டிய தண்ணீர் தின கிராமசபை நிர்வாக காரணத்திற்காக, மார்ச் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது,மார்ச் 29ம் தேதிக்கு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
திமுக போராட்டம்
அதே 29ம் தேதி நூறுநாள் வேலை திட்டத்திற்கு நிதியை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து அனைத்து ஒன்றியங்களிலும் போராட்டம் அறிவித்து உள்ளது ஆளும் திமுக.
கிராம சபை கூட்டத்திற்கு வரவேண்டிய ஊராட்சியை சார்ந்தவர்கள் போராட்டத்திற்கும் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆளும் கட்சி நடத்தும் போராட்டம் என்பதால், கட்டாயம் நூறுநாள் பணியாளர்கள் செல்லவேண்டும்.
இந்த சூழ்நிலையில் எப்படி கிராமசபை கூட்டம் முழுமையான ஈடுபாட்டுடன் நடைபெறும். ஆகவே….போராட்ட நிகழ்வை தள்ளி வைக்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.