பெருந்திரளாக ஊராட்சி செயலாளர்கள் வருவார்களா?

ஏப்ரல்4

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒற்றை கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக ஆணையர் அலுவலகம் அருகே ஒருநாள் பெருந்திரள் ஆர்பாட்டம் செய்ய உள்ளனர்.

11225 (காலி பணியிடம் தவிர்த்து)ஊராட்சி செயலாளர்களில் எவ்வளவு பேர் விடுப்பு எடுத்து சென்னை வருவார்கள் என மாவட்டம் தோறும் செய்தி சேகரித்து வருகிறோம்.

அதற்கு ஒரு உதாரணமாக…

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியம் ஊராட்சி செயலாளர்கள் ஏப்ரல் 4ம் தேதி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நடத்தபடும் சென்னை பெருந்திரள் போராட்டத்தில் கலந்து கொள்ள விளாத்திகுளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அவர்களிடம் விடுப்பு கடிதங்கள் வழங்கபட்டுள்ளது.

மொத்தம் 51
விடுப்பு கடிதம் 44
காலியிடம் 07

இது போலவே சில மாவட்டங்கள் தவிர,பெரும்பான்மையான மாவட்டங்களில் இருந்து பெருந்திரளாக சென்னை வருவதற்காக விடுப்பு கடிதங்களை வழங்கி வருகிறார்கள்.

அவர்களின் கோரிக்கையை வென்றெடுக்க நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

Also Read  குருபரஹள்ளி ஊராட்சி - தருமபுரி மாவட்டம்