பெரம்பலூர்
மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை ஊரக வளர்ச்சித் துறையை சார்ந்த ஒரு சங்கத்தினர் கொடுத்துள்ளனர்.
அமைச்சரிடம் கொடுங்கள் என்னிடம் தேவையில்லை என காட்டமாக கலெக்டர் பேச, இது மாவட்டத்திற்குள் நடைபெற வேண்டிய நிர்வாக பிரச்சனை என சங்கத்தினர் கூறி உள்ளனர். அவர்களின் மனு வாங்கி அவர்களின் கண் முன்னே மாவட்ட ஆட்சியர் மனுவை கிழித்து குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.
அதனை கண்டித்து அங்கேயே போராட்டம் நடத்த, காவல்துறைக்கு தகவல் கூறி அவர்களை கைது செய்ய உத்தரவிட்டாராம் கலெக்டர்.
இப்படி ஒரு செய்தி நாளிதழில் வந்துள்ளது.
அதிகாரவர்க்கம்
ஒரு மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்திற்கு உட்பட்ட செயலுக்காக கொடுத்த மனுவை கிழிப்பது என்பது அதிகாரவர்க்கத்தின் ஆணவ செயல்.
இதே கோபத்தை அமைச்சர்களிடம் மாவட்ட ஆட்சியர் காட்ட முடியுமா?. அதைவிட, ஆளும் கட்சியின் ஒன்றிய செயலாளரிடம் கூட கோபத்தை காட்ட முடியமா இந்த மாவட்ட ஆட்சியர்.
ஆக…தனக்கு கீழே பணிபுரியும் ஊழியர்கள் அடிமைகளாக நடத்தும் அதிகார போக்கை அனைத்து அதிகாரிகளும் மாற்றி கொள்வது அவசியம்.
இந்த விடயத்திற்கு,ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து சங்கங்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.