ஊராட்சி தலைவர்
அரியலூர் மாவட்டத்தில் தலையாரி குடிக்காடு கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு வழங்க திட்ட இயக்குனர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேர்மையான அந்த முன்னாள் ஊராட்சி தலைவர் இன்றும் குடிசை வீட்டில் வசதிப்பது பற்றி காட்சி ஊடகங்களில் செய்தி வந்தது.
அதனை அடுத்து அதிரடியாக செயலில் இறங்கிய அரியலூர் மாவட்ட திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன் அவர்கள், கலைஞரின் வீட்டு வசதி திட்டத்தில் கீழ் வீடு கட்டிட அனுமதி வழங்கி உள்ளார்.

திட்ட இயக்குநருக்கும்,அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கும் நமது இணைய தளத்தின் சார்பாகவும் நன்றி.