திண்டுக்கல் மாவட்டம்
காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வோதயா தினத்தில் இந்த ஆண்டிற்கான ஜெகநாதன் விருது. எனக்கு பத்மபூஷன் விருது பெற்ற அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
தேசிய அளவில் முக்கியமான எழுத்தாளரான ஐயா திரு ஜெயமோகன் அவர்களுடன் இணைந்து பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் மார்ட்டின் லூதர் கிங், இந்தியாவின் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி வாஜ்பாய் ஐயா நரேந்திர மோடி வரை அனைவரும் கால் பதித்த காந்திய மண்ணில் எனக்கு விருதினை வழங்கியதற்கு மிகுந்த பெருமைப்படுகின்றேன்.
நிலமற்ற ஏழைகளுக்கு
சுமார் 13,000 ஏக்கர் நிலத்தை திரு ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் பூமிதான இயக்கத்தின் விசையாக இருந்து பத்மபூஷன் விருது பெற்ற அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் கரங்களில் பெற்றது கூடுதல் மகிழ்ச்சி.
நிகழ்வில் பங்கு பெறும் பொழுது இதற்கு நாம் தகுதியானவரா என்று சிந்திக்க தோன்றியது.
எனினும்,உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த காந்திய வழி செயல்பாட்டாளர்கள் முன்னிலையில் பிரதாபராமபுரம் ஊராட்சியின் செயல்பாடுகளை எடுத்துரைத்தது கடந்த ஐந்து ஆண்டுகள் எங்களது பணிகளுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகின்றேன்.
மேலும் இந்த சிறப்பினை வாய்ப்பினை வழங்கிய பிரதாபராமபுரம் கிராம ஊராட்சி பொதுமக்களுக்கும் என்னுடன் பயணித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் , நண்பர்களுக்கும்,எங்களது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அலுவலர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
மேலும் இந்த வாய்ப்பினை வழங்கிய காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு எனது சார்பாகவும் எங்களது கிராம ஊராட்சியின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
(இப்படி ஒரு பதிவு முகநூல் பக்கத்தில் கண்டேன். இளம் தலைமுறைக்கு உதாரணமாக திகழும் இந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு நமது இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.)