சிவராசு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றிய சிவராசு என்ற இளைஞர்,பதவி காலம் முடிந்த பிறகும் மக்கள் சேவையை தொடர்வது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
அவர் முகநூலில் பதிவிட்டுள்ள செய்தி:-
கடந்த ஒரு வருட தொடர் முயற்சிக்குப் பின்பு 30 பெண்களை உள்ளடக்கிய “தூரிகை கார்மெண்ட்ஸ்” எனும் கார்மெண்ட்ஸ் நிறுவனம் பிரதாப ராமபுரம் கிராம ஊராட்சியில் துவங்கப்பட்டுள்ளது.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் பி ஆகாஷ் இ.ஆ.ப அவர்கள் நிகழ்வை துவக்கி வைத்தார் மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனமான சரண்யா சில்க்ஸ் நிறுவனர் திரு கி முத்துராமலிங்கம் ஐயா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
முதல் கட்டமாக Mission Samridhi நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி பெண்களுக்கான ஆயத்த ஆடைகளான நைட்டி, குர்தி ,சுடிதார் டாப்ஸ், உள்பாவாடை, குழந்தைகளுக்கான ஆடைகள் ஆகியவை தைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
நிறுவனத்தின் உற்பத்திகளை சரண்யா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் கொள்முதல் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என நிறுவனர் ஐயா அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்.
கிராம ஊராட்சியின் பெரும்பாலான பெண்களின் அத்தியாவசிய தேவைகளான ஆயத்த ஆடைகளை மேற்கண்ட நிறுவனத்தின் மூலமாக பூர்த்தி செய்வதும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும் மேற்கண்ட நிறுவனத்தின் இலக்காகும். எங்களது முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அலுவலர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவரின் பணி எந்நாளும் தொடர நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.