ஆணையரால் மட்டுமே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என கூறுகிறார்கள் தலைவா…
யார் அவர்கள்,என்ன விவரம் ஒற்றரே.
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியமாக இரண்டு ஆயிரம் மட்டுமே என்ற நிலை இன்றும் உள்ளதாம். காலமுறை ஊதிய முறைக்குள் ஊராட்சி செயலாளர்களை ஏற்கனவே கொண்டு வந்துவிட்டார்கள் தலைவா.
அப்படி கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியை கட்சி பாகுபாடு பாராமல் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் காலமெல்லாம் நன்றியோடு நினைத்து வருகிறார்கள் என்ற தகவல் எனக்கும் தெரியும் ஒற்றரே..
ஆமாம் தலைவா…அரசு ஊழியர்கள் போல ஓய்வூதியம் கிடைத்திட துறை சார்ந்து பரிந்துரை செய்யும் பணியை ஆணையர் அவர்கள் செய்திட வேண்டும். எங்களின் நிலை உணர்ந்த ஆணையர் அய்யாவால் மட்டுமே இது சாத்தியப்படும் என ஊராட்சி செயலாளர்கள் கூறுகிறார்கள்.
அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளரின் ஆலோசனையோடு ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்திட வேண்டும் என ஒரே குரலில் கேட்கிறார்கள் ஒற்றரே…
ஆமாம் தலைவா.இந்த செயல் மட்டும் நடந்து விட்டால், ஊராட்சி செயலாளர்களின் அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் கூட ஆணையரை மறக்க மாட்டோம் என கூறுகின்றனர் என சொல்லி விட்டு மறைந்தார் ஒற்றர்.