ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள்

சார்லஸ் ரெங்கசாமி
சார்லஸ் ரெங்கசாமி

பெறுநர்.
மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச்
செயலர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை

அய்யா
பொருள்: ஊரகவளர்ச்சித்
துறையில் பணியாற்றும் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கேட்டல்-தொடர்பாக

பார்வை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம்நாள்:8.02.25

1.ஊரகவளர்ச்சி துறையில் 12525கிராம ஊராட்சிகள் உள்ளன.அதில்
2000மேற்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பணியிடம் காலியாக உள்ளது. தற்போது 1.தென்காசி
2.திருநெல்வேலி
3.கள்ளக்குறிச்சி
4.விழுப்புரம்
5.காஞ்சிபுரம்
6.இரானிப்பேட்டை
7.,செங்கல்பட்டு
8.திருப்பத்தூர்
9.வேலூர்
மாவட்டங்களில் மக்கள் பிரதிநி உள்ளனர் மற்ற மாவட்டங்களில் தனி அலுவலர் பொறுப்பில் ஊராட்சி நிர்வாகம் உள்ளது. இதனால் காலிப்பணியிடத் தில் ஊராட்சி செயலாளர்கள் கூடுதல் பொறுப்பாக பணி செய்கின்றனர்.
ஊராட்சிகளில் வீட்டு வரி,நூலகவரி,
தொழில் வரி,குடிநீர் வரி வசூல்செய்ய
வேண்டும், ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு,வடிகால் சுத்தம் செய்தல்,கிராமசபை கூட்டம் நடத்துதல் உள்பட பல பணிகளை ஊராட்சி செயலாளர்கள் செய்கின்றனர் இதனால் காலிப்பணியிட ஊராட்சிகளில் கூடுதல் பொறுப்பு பார்க்க கஷ்டப்படுகின்றனர்.எனவே காலிபணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
2.ஊராட்சி செயலாளர்களுக்கு தற்பொழுது சம்பளம் ஊராட்சியில் வழங்கப்படுவதை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி )மூலம் வழங்கவேண்டும்.
தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கவேண்டும்.
ஓய்வுபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் தற்பொழுது
பெறும்
சம்பளத்தில் 50%
வழங்கவேண்டும்.
3.கிராம ஊராட்சியில் பணியாற்றும்
குடிநீர் மேல்நிலை
தொட்டி இயக்குனர்கள் இரவு முழுவதும் மோட்டாரை இயக்கி காலையிலும் மாலையிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை வழங்குகின்றனர் இவர்களுக்கு மதிப்பு ஊதியமாக மாதம் ரூ5100வழங்கப்படுகிறது. அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு
மேல் பணிபுரிந்து வருகிறார்கள் அவர்களுக்கு சிறப்பு காலமுறைஊதியம்
வழங்கவேண்டும். ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.

Also Read  ஊழல் நடைபெற அரசே காரணம் - உண்மையை சொன்ன ஊராட்சி தலைவர்

4.கிராம ஊராட்சி யில்தூய்மை பணியாளர்கள்
குறைந்த பணியாளர்களே பணிசெய்து வருகிறார்கள்.
பலர் ஓய்வு பெற்றுவிட்டனர்அந்த காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்

5.கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு மாதச்சம்பளம்தற்பொழுதுரூ5000/-வழங்கப்படுகிறது. அதை ரூ10000 உயர்த்திவழங்க
வேண்டும்.
6.ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும்போது இறந்தவர்களுக்கு அவரின் வாரிசு தாரருக்கு காலிப்பணியிடம் உள்ள ஏதாவது ஒரு துறையில் இளநிலை உதவியாளராக பணி வழங்கவேண்டும்.

7.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,உதவி இயக்குநர் அலுவலகம், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் கணிணி இயக்குனர்களுக்கும் மாதச்சம்பளம்
ரூ25000வழங்கவேண்டும்.

8.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,வட்டார ஒருங்கிணைப்பாளர்களை நிரந்தரம்
செய்யவேண்டும்
9.மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தனியாக நியமனம்செய்யப்படவேனண்டும்.

ஆர்.சார்லஸ்
மாநில தலைவர்
K.ரவி
மாநில பொதுச்செயலாளர்
V.குமரேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
S.பெரியசாமி மாநில
பொருளாளர்
தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்.