என்ன ஒற்றரே…பதட்டமா,பரபரப்பா…
எனக்கு ஏன் தலைவா பதட்டம். உள்ளாட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் தான் பதட்டமா இருக்காங்க..
ஏன் ஒற்றரே..
தெரியாத மாதிரி கேட்குறீங்க. வர்ர ஜளவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடியுது. இனி,நாங்க சொல்றத தான் நீங்க கேட்கனும்னு கரை வேட்டிக்காரர்கள் அலப்பறையை ஆரம்பிச்சிட்டாங்க.
ஆளும் கட்சினா அப்படித்தானே ஒற்றரே..
நாங்க கை காட்டுறவங்களுக்குத்தான். வேலை கொடுக்கனும்.நாங்க சொல்ற படி தான் நடக்கனும்னு குரூப்1 தேர்வில் வெற்றி பெற்று பதவியில் உள்ள அதிகாரிகளை, எட்டாம் வகுப்பு கூட தாண்டாத கரை வேட்டிகள் மிரட்டுகிற போக்கு இப்பவே ஆரம்பிச்சாச்சு.
இவங்க பன்னுற அலப்பறையால ஆளுங்கட்சி மேல மக்களுக்கு வெறுப்பு தானே வரும் ஒற்றரே..
ஆமாம் தலைவா, அத உணந்ததனால மே மாசமே தேர்தல நடத்தி முடிச்சிட தலைமை தயாராகுதாம்.
திரும்பி பார்ப்பதற்குள் மாயமாய் மறைந்தார் ஒற்றர்.