ஊரக உள்ளாட்சி
ஜனவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பதவி காலம் முடிய உள்ள 27 மாவட்டங்களில் ஆறு மாதத்திற்கு தனி அலுவலர் ஆளுமை காலம் ஆரம்பிக்க உள்ளது.
குறிப்பாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது.ஆக, மக்கள் பணி செய்ய பிரதிநிதிகள் இல்லாத நிலை உருவாக உள்ளது.
மத்தளம்
இரண்டு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போல, அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சியினர்களிடம் சிக்கி பாதிக்கப் படப்போவது சாதாரண மக்கள்.
மக்களின் பிரச்சனைகளை,கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை பத்திரிகை தோழர்கள் செய்யவேண்டும்.
ஆளும் வர்க்கத்தினரின் அத்துமீறல்களை கட்சியின் தலைமையிடம் கொண்டு சேர்க்கும் பணியை பாகுபாடு இல்லாமல் அனைத்து பத்திரிகைகளும் செய்ய வேண்டும்.
இந்த பணியில் நமது www.tnpanchayat.com இணைய செய்தி தளமும், அரசியல் கண்ணாடி(மாதம் இருமுறை) இதழும் தொடர்ந்து செய்வோம்.
தனி அலுவலர் காலம் வரை மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு துணையாக நிற்போம். எங்களோடு சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் கை கோர்க்க வாருங்கள்.