27 மாவட்டங்கள் – 2 வருடங்கள் – அதிகாரிகள் ராஜ்ஜியம்

உள்ளாட்சி தேர்தல்

27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் ஜனவரி 5-2024 அன்று முடிவடைகிறது. 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்று, 2020 ஜனவரி 5ம் தேதி அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் பதவி ஏற்றனர்.

அதன்படி, வரும் டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடைபெற்று முடிய வேண்டும். அதற்கான எந்த முன் முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.

திமுக உயர்மட்ட கூட்டம்

சமீபத்தில் ஆளும் திமுகவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில்  கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான ஸடாலின் அவர்கள் பேசும்போது, இன்றையில்  இருந்தே சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்குங்கள் என கட்சியினருக்கு உத்தரவு இட்டார்.

ஆக…உள்ளாட்சி தேர்தல் சட்டமன்ற தேர்தல் வரை கிடையாது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் முதல்வர். 2026 ஜூன் மாதத்திற்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்பதே உறுதி படுத்தப்பட்ட செய்தி.

இணைப்பு செய்தி:- ஊரக துறை அமைச்சரிடம் உள்ளாட்சி தேர்தலை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தல் ஆணையமும் முதல்வரும் முடிவெடுப்பர் என்று பதில் அளித்துள்ளார்.

 

Also Read  வறண்ட பூமியை வளமாக்கியது எப்படி - விவரிக்கிறார் திருச்செல்வம்ராமு