50 சதவீதம் நகரமயமாதல் – ஊராட்சிகளின் நிலை?

16 வது நிதிக்குழு

தமிழ்நாடு வந்துள்ள நிதிக்குழுவிடம் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நகரமயமாதல் நடைபெற்று வருவதாக கூறி உள்ளார். அதனால், உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வரி பகிர்வை அதிகமாக்க வேண்டும் என கோரி உள்ளார்.

மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் அவர்களும் அதே கருத்தை தெரிவித்து உள்ளார். அதற்கு வலு சேர்ப்பது போலவே,500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை நகரப் பகுதிகளோடு இணைக்கும் பணி வேகம் எடுத்துள்ளது.

ஊராட்சிகள்

12525 ஊராட்சிகளாக உள்ள எண்ணிக்கை குறைந்து வருகிறது. பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி அமைப்புகளின் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் திட்டம் நடைபெற்றுவருகிறது.

அதன்பிறகு,அதன் அருகில் உள்ள ஊராட்சிகள் வளர்ச்சி அடைய தொடங்கும். நகரப் பகுதியை ஒட்டிய ஊராட்சிகளை நோக்கி மக்கள் இடம் வாங்குவது அதிகரிக்கும். அடுத்த ஐந்தாண்டு கழித்து, வளர்ச்சி அடைந்த ஊராட்சிகளை மீண்டும் நகர் பகுதிகளோடு இணைப்பார்கள்.

கடைசியில் ஊராட்சிகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் அடங்கிவிடும் அபாயம் ஏற்படும். ஊரக வளர்ச்சித்துறையே தேவை இல்லாத நிலை ஏற்படும். ஓய்வூதிய துறையை கருவூலத் துறையோடு இணைத்தது போல, ஊரக வளர்ச்சித் துறையை நகர் வளர்ச்சி துறையோடு இணைத்து விடுவார்கள்.

Also Read  ஊராட்சி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு....அரசுக்கு வேண்டுகோள்..

இப்போது நகரமயமான பகுதிகளின் அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாத நிலையில், ஊராட்சிகளை நகர் பகுதிகளோடு இணைக்கும் திட்டம் அறிவாளித்தனமான செயல் தானா?

ஊராட்சிகளின் அடிப்படை கட்டமைப்பை உயர்த்தி, கிராமப்புற பகுதிகளில் மாசு இல்லா தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே புத்திசாலியான அரசாங்கத்தின் செயல் ஆகும். அதைவிடுத்து, தமிழ்நாடு நகரமயம் ஆகி வருகிறது என மார்தட்டி சொல்வது அறிவீனம் ஆகும்.

ஊராட்சிகளின் வளர்ச்சி தான் ஒரு நாடு வல்லரசு மற்றும் நல்லரசு ஆவதற்கு அடிப்படை ஆகும். இதை உணர்ந்து செயல்படுவார்களா ஆளும் வர்க்கத்தினர்.