உள்ளாட்சி தினம்
உள்ளாட்சிகளை வலுப்பெற செய்யும் விதமாக கிராம சபை கூட்டங்கள் ஜனவரி 26-ந் தேதி (குடியரசு தினம்), மார்ச்-22ந் தேதி (உலக தண்ணீர் தினம்), மே-1ந் தேதி (தொழிலாளர் தினம்), ஆகஸ்டு-15ந் தேதி (சுதந்திர தினம்), அக்டோபர்-2ந் தேதி (காந்தி பிறந்த தினம்), நவம்பர் 1-ந் தேதி (உள்ளாட்சி தினம்) ஆகிய 6 நாட்கள் நடத்தப்பட வேண்டும்.
கடந்த நவம்பர் 1ம்தேதி நடைபெற இருந்த கிராமசபை நிர்வாக காரணத்திற்காக இன்று (நவம்பர்23) நடத்தப்பட்டது.
2019ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நடத்திய கடைசி கிராமசபை கூட்டம் இது. அவர்களின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.அடுத்து ஜனவரி26 அன்று நடைபெற உள்ள( 27 மாவட்டங்கள்) கிராமசபை கூட்டம் அதிகாரிகளால் நடத்தப்படும்.
எப்போது 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடப்பது என்பது திமுக வின் கூட்டணி கட்சிகளின் இட பங்கீட்டில் உள்ளது என்றார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.