தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சர் அவையில் முதலமைச்சர் உட்பட 35 பேர் உள்ளனர்.
ஒரு அமைச்சருக்கு அதிகபட்சமாக அரசு தரப்பில் இரண்டு உதவியாளர்கள் நியமிப்பது நடைமுறையாக உள்ளது. அரசியல் உதவியாளராக ஒருவர் இருப்பார். சில அமைச்சர்கள் அரசியல் ரீதியாக ஒன்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்களை வைத்துக்கொள்வர்.
ஆனால், ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு அரசு சார்பாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் எத்தனை பேர்?. அரசியல் ரீதியாக உள்ள உதவியாளர்கள் எத்தனை பேர் என தெரியவில்லை.
நான் அமைச்சரின் உதவியாளர் என புற்றீசல் போல் புறப்பட்டு அதிகாரிகளிடம் ஆணையிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, ஜனவரி 5ம் தேதியோடு 27 மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைகிறது.
தனி அலுவலர் காலகட்டத்தில் உள்ளூர் ஆளும் கட்சியினர் ஒரு பக்கம் என்றால், அமைச்சரின் உதவியாளர் என பல பேர்கள் இப்போதே அதிகாரம் செலுத்த ஆரம்பித்து விட்டனராம்.
அமைச்சர் அவர்களின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வேலையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும். ஏனெனில், ஊரக வளர்ச்சித் துறை என்பது மக்களிடம் நேரடியாக தொடர்புள்ள துறை ஆகும்.
அமைச்சர் தக்க நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.