ஊரகவளர்ச்சி பொறியியல் பிரிவுக்கு சேர்மன்களின் ஈப்பினை வழங்கிடுக-மாநில தலைவர் தமிழக முதல்வருக்கு கடிதம்

அரசு வாகனம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது..

தமிழகத்தில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் மற்றும் 388 ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு மத்திய மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தமட்டில் இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும்,ஒன்றிய சேர்மன்களுக்கும் ஈப்பு வழங்கப்பட்டுள்ளது..ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாத சூழல் நிலவி வரும் தருணத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மன்களுக்கான ஈப்புகளை வருவாய்துறை வசம் தற்காலிகமாக வழங்க உள்ளதாக வரப்பெறும் செய்தி எக்காரணம் கொண்டும் ஏற்கதக்கதல்ல

ஒவ்வொரு ஒன்றியங்களுக்கும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை தினசரி கள அளவில் பார்வையிடும் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள்/ஒன்றிய பொறியாளர்கள்/இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ஈப்பினை வழங்கி வளர்ச்சித்திட்ட பணிகளை சிறப்பாக செய்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.அதனை விடுத்து வருவாய்துறை பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்தால் வளர்ச்சித்துறை சங்கங்களை ஒன்று திரட்டி போராட வேண்டிய சூழல் ஏற்படும்.எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதில் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

Also Read  தே.மீனாட்சிபுரம் ஊராட்சி - தேனி மாவட்டம்