ஊராட்சிக்கு வருமானம் – முருங்கை சாகுபடி

12525

ஊராட்சிகள் உள்ள தமிழ்நாட்டில் 10 சதவீத ஊராட்களில் மட்டுமே சுயவருமானம் உள்ளது. மற்ற ஊராட்சிகளின் நிர்வாக செலவுக்கு கூட மத்திய, மாநில நிதியை எதிர்பார்க்கும் சூழலே உள்ளது.

ஊரக வளர்ச்சி துறையில் பல சீர்திருத்தங்களை செய்து வரும் இயக்குநர் அவர்கள் ஊராட்சிகளின் தற்சார்பு பொருளாதாரத்தில் தக்க கவனம் செலுத்திட வேண்டும்.

நூறுநாள்

ஊராட்சிகளுக்கு சொந்தமாக உள்ள நிலங்களில் நூறு நாள் வேலைவாய்ப்பு பணியாளர்களை பயன்படுத்தி பணப் பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

நூறுநாள் பணியாளர்கள் அனைவரும் விவசாயம் அறிந்தவர்கள். நீர் மேலாண்மை குறைவாக தேவைப்படும் பணப்பயிர்களை விளைவிக்க செய்திடல் வேண்டும்.

குறிப்பாக, முருங்கையின் தேவை மிக அதிகமாக உள்ளது. முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. முருங்கைக்கு தண்ணீர் தேவையும் குறைவே.

ஒவ்வொரு ஊராட்சியிலும் கணிணி வசதி செயல்பட தொடங்கி உள்ளது. இந்த காலகட்டத்தில் விவசாய பொருட்கள் விற்பனை என்பது இணைய வழி வியாபாரமாக மாறிவிட்டது.

முருங்கை பொருட்களை மதிப்பு கூட்டல் செய்து ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த ஒரு திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஊராட்சியின் பொருளாதாரமும் வலுப்படும்,விவசாயமும் காப்பாற்றப்படும். தனிமனிதரை விட ஊராட்சி நிர்வாகம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.

Also Read  தெத்தமங்கலம் ஊராட்சி- திருச்சி மாவட்டம்

ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிச்சுமையை  அதிகரிக்காமல், தூறுநாள் பணியாளர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

தற்போது, பல ஊராட்சிகளில் கீரை வகைகள்,மரக் கன்று பயிரிடுதல் போன்றவை மிகச்சிறப்பாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

துறை அமைச்சர்,முதன்மை செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் என சிறப்பாக அமைய பெற்றுள்ள இந்த கால கட்டத்தில் சிறப்பான சீர்திருத்தங்கள் செயல்பாட்டுக்கு வரட்டும்.