ஜனவரி 5
இன்றோடு 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. அடுத்து எப்போது தேர்தல் நடைபெறும் என்ற கேள்விக்கான விடையை பலரும் பலவிதத்தில் தேடி வருகின்றனர்.
ஆறுமாத காலத்திற்கு தனி அலுவலர் காலம் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. உள்ளாட்சி ஜனநாயகம் சைலண்ட் மோடிற்கு சென்று விட்டது. எப்போது மீண்டும் தேர்தல் என்பது ஆளும் கட்சியின் தலைமையின் கையில் உள்ளது.
மாநில சுயாட்சி பற்றி பேசுபவர்கள் உள்ளாட்சியின் தன்னாட்சியை காலில் போட்டு மிதிக்கும் அவல நிலை உள்ளது.
எங்க சார் உங்க சுயாட்சி நிலைப்பாடு?