இராதாகிருஷ்ணன் இஆப அவர்களுக்கு ராயல் சல்யூட்

சுனாமி

2004 ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் டெல்டா மாவட்டங்கள் சிதைந்து போனது. அப்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இராதாகிருஷ்ணன் இஆப அவர்களின் பணி மகத்தானது.

குறிப்பாக, ஆழிப் பேரழிவில் பொற்றோர்களை இழந்த குழந்தைகளை அரவணைத்தார். அவர்கள் இன்று வளர்ந்து பெரியவர்களாகி அவர்களும் பெற்றோர்களாகி விட்டனர்.

அவர்களின் குழந்தைகள் இராதாகிருஷ்ணன் இஆப அவர்களை தாத்தா என உறவோடு அழைத்தது அனைவரையும் நெகிழ செய்துள்ளது. சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் எத்தனையோ இஆப பணிபுரிந்து உள்ளனர். பணி புரிந்தும் வருகின்றனர்.

அப்படி மக்களுக்கு பணி புரிந்த இந்திய ஆட்சி பணியாளர்களில் ஆகச்சிறப்பாக பணியாற்றிய சிலரில் முக்கியமானவராக இருக்கிறார் இராதாகிருஷ்ணன் இஆப.

அவருக்கு நமது இணைய செய்தி தளத்தின் சார்பாக ராயல் சல்யூட்.

ஊரக செய்திகளை கடந்து, இதுபோன்று சிறப்பு செய்திகளை வெளியிடுவது ஊடக தர்மம் ஆகும்.

 

Also Read  ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரை பாராட்டும் துறை அதிகாரிகள்