எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. என்று திருக்குறளை கூறிக்கொண்டே வந்தார் ஒற்றர்.
என்ன ஒற்றரே திருக்குறள்…
தலைவா…கலந்தாய்வுடன் இடமாறுதல் உத்தரவை போட்டுள்ள ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா இஆப அவர்களுக்கு 10 ஆயிரத்தும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மனதார சொல்லும் வார்த்தை.
சரி தான் ஒற்றரே…ஊராட்சி நிர்வாகத்தின் ஆணி வேராக விளங்கும் ஊராட்சி செயலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது சிறப்பு தானே….
அதுமட்டுமல்ல தலைவா…ஊராட்சி செயலாளர்,மேல்நிலை தண்ணீர் தொட்டி திறப்பாளர்கள், தூய்மை காவலர்கள் எனும் அடிப்படை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றுவதற்கு முழு முயற்சி நடைபெற்று வருவதாக உறுதி படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.
நல்லது நடக்கட்டும் ஒற்றரே…நகராட்சி துறையில் பணியாற்றும் போது, பல நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு பொன்னையா இஆப அவர்கள் தீர்வு கண்டதாக அந்த துறையில் பணிபுரியும் அதிகாரிகள் என்னிடம் பல விசயங்களை பகிர்ந்து கொண்டனர்.
தலைவா…அத்திவரதர் எழுந்தருளிய போது மாவட்ட ஆட்சியராக இருந்து அவர் செய்த பணிகளை அனைத்து கட்சியினர் மட்டுமின்றி அனைத்து பத்திரிகையாளர்களும் இன்றளவும் பாராட்டி வருவது சிறப்பு.
சரியாக சொன்னீர் ஒற்றரே..ஊரக வளர்ச்சி துறையில் பொன்னையா இஆப அவர்கள் செய்யும் செயலுக்கு முதன்மை செயலாளரும், துறை அமைச்சரும் உறுதுணையாக இருப்பது கூடுதல் சிறப்பு.
அவரின் பணி சிறக்கட்டும் என கூறி விட்டு மாயமாய் மறைந்தார் ஒற்றர்.