என்ன ஒற்றரே…நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே
ஆம் தலைவா…சொந்த வேலையாக வெளிவூர் சென்றிருந்தேன். ஊரக வளர்ச்சித்துறை செய்திகளோடு வந்துள்ளேன்.
சொல்லுங்க ஒற்றரே…
27 மாவட்டங்களில் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைகிறதல்லவா…2026க்கு பிறகுதான் தேர்தல் நடைபெற வாய்ப்பு.அதனால…
அதனால என்ன ஒற்றரே…முக்கிய தகவலா.
ஆமாம் தலைவா…முக்கிய ஊராட்சிகளுக்கு தங்களுக்கு வேண்டப்பட்ட செயலாளர்களை இடமாற்றம் செய்யும் காரியம் நடக்கிறது. பல மாவட்டங்களில் பணம் இடமாற்றத்தை தீர்மானிக்கிறதாம்.
அப்படியா…எந்த மாவட்டங்களில் பணம் விளையாடுகிறது ஒற்றரே…
முக்கியமாக, தென்கோடி மாவட்டத்தை சேர்ந்த பிஏ பிடி ஒருவர் தான் பணிபுரியும் மாவட்டத்தில் புகுந்து விளையாடுகிறாராம்……அதுமட்டுமல்ல,அமைச்சரின் உதவியாளர் ஒருவர் தனி ஆவர்த்தனம் செய்கிறாராம்.
என்ன செய்கிறார் ஒற்றரே…
அமைச்சருக்கு பல உதவியாளர்கள் உலா வருகிறார்கள். அதில் ஒருவர் முன்னாள் அமைச்சர் வேலுமணி பாணியில்,தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஊராட்சிகளுக்கு தேவையான பல பொருட்களை சப்ளை செய்வதற்கு உத்தரவு இட்டு வருகிறாராம்.
அப்படி செய்ததால் தான் ஊழல் குற்றச்சாட்டில் நீதி மன்றத்திற்கு செல்ல உள்ளார் வேலுமணி. உதவியாளரின் இந்த செயல் இன்றைய அமைச்சருக்கு தெரியுமா ஒற்றரே…
இந்த செய்தியை சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி உள்ளேன். நடவடிக்கை எடுத்தால் அமைச்சருக்கு நல்லது.
திரும்பி பார்ப்பதற்குள் மாயமாய் மறைந்தார் ஒற்றர்.