ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருக்கு சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கை…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. தமிழ் நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் உதவி திட்ட அலுவலர் நிலையில் ஐந்து பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே நியமனம்செய்யப்பட்டு மற்ற நான்கு பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது அதேபோல் உதவியாளர் நிலையில் ஒருவர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு மற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. அதை இரத்து செய்து ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றுபவர்கள நியமனம் செய்யவேண்டும்.

2. ஊரக வளர்ச்சித்துறையில் மூன்று ஆண்டு பயிற்சிக்காக பிற துறையில் பணியாற்று பவர்களை நியமனம் செய்வதால் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு தாமதமாகின்றது. எனவே பிற துறை பணியாளர்களை பயிற்சிக்கு நியமனம் செய்வதை இரத்து செய்யவேண்டும்.

3. ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வருவாய் துறையில் வட்டாட்சியர்களுக்கு வழங்கும் நீதித்துறை பயிற்சி வழங்கவேண்டும்.

4. ஊராட்சி செயலாளர்களுக்கு தற்பொழுது சம்பளம் ஊராட்சியில் வழங்குவதால் காலதாமதம் ஏற்படுகின்றது. எனவே சம்பளத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி மூலம் வழங்கவேண்டும். தேர்வநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் தற்பொழுது பெறும் சம்பளத்தில் 50% வழங்கவேண்டும்.

Also Read  கூனாண்டியூர் ஊராட்சி - சேலம் மாவட்டம்

5. கிராம ஊராட்சியில் பணியாற்றும் குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

6. உதவி இயக்குனர் நிலையில் இருந்து திட்ட இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் இருந்து உதவி இயக்குநர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

7. உதவி/ஒன்றிய பொறியாளர் நிலையில் இருந்து உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

8. ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடத்தை நிரப்பவேண்டும்.

9. கிராம ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்

10. கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு மாதச்சம்பளம் ரூ.10000/- வழங்கவேண்டும்.

11. ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும்போது இறந்தவர்களுக்கு அவரின் வாரிசுதாரருக்கு காலிப்பணியிடம் உள்ள ஏதாவது ஒரு துறையில் இளநிலை உதவியாளராக பணி வழங்கவேண்டும்.

12. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உதவி இயக்குநர் அலுவலகம், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் கணிணி இயக்குனர்களுக்கும் மாதச்சம்பளம் ரூ.20000/- வழங்கவேண்டும்.

13. மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்

சார்லஸ் ரெங்கசாமி
சார்லஸ் ரெங்கசாமி

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.