27 மாவட்டங்கள்
டிசம்பர் மாதத்துடன் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது.
2019- தேர்தல்
முதல்கட்டமாக,27 டிசம்பர் 2019 (வெள்ளிக் கிழமை) அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 2546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 4700 கிராம ஊராட்சித் தலைவர்கள், 37,830 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 45,336 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது,
இரண்டாம் கட்டத் தேர்தல் 30 டிசம்பர் 2019 (திங்கள்கிழமை) அன்று 46 ஆயிரத்து 639 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. அதில் 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.
ஆக…தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி பதவிகளில் 80சதவீதம் காலியாகப் போகிறது. இரண்டு ஆண்டுகள் அதிகாரிகளின் ஆளுமையின் கீழ் உள்ளாட்சி நிர்வாகம் நடக்கப்போவதாக உறுதியான தகவல் தெரிவிக்கின்றது.
ஆளும்கட்சியினரும்- அதிகாரிகளும்
2019 ல் நடந்த முடிந்த உள்ளாட்சி பதவிகளில் திமுக , அதிமுக மற்றும் கட்சி சாராதவர்கள் கூட இருந்தனர்.
ஆனால், டிசம்பருக்கு பிறகு ஆளும் கட்சியினர் மட்டும் அதிகாரம் செலுத்த உள்ளனர்.
திமுக கட்சியினர் இடும் கட்டளையை ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட அதிகாரிகள் வரை நிறைவேற்றி தரவேண்டிய கட்டாயம் ஏற்படும். மக்களுக்கான பணிகள் ஆளும்கட்சியினர் தலையீட்டால் என்னவாகும் என்ற நிலையை நினைத்து பயப்படும் நடுநிலை மக்களின் கவலை ஞாயமாகவே படுகிறது.
அதைவிட, மக்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் நடுவே மாட்டிக்கொண்டு அவஸ்தை படப்போவது ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மட்டுமே.