நல்லதை பாராட்டுவோம்
தவறுகளை செய்தியாக தருவது மட்டுமல்ல,நல்லது செய்பவர்களை பாராட்டுவதுமே ஊடக தர்மம். மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டும் நபராக இருக்கிறார் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன்.
நம்மிடம் ஊராட்சி செயலாளர் ஒருவர் பேசியபோது, தவறு செய்யும் ஊழியர்களிடம் கடுமை காட்டுவார்.நன்றாக பணிபுரியும் ஊழியரை பற்றி ஆய்வு செய்ய போகும் இடமெல்லாம் மற்றவர்களிடம் பாராட்டி பேசுவார்.
நிதி ஒதுக்கீடு செய்யும் விசயத்தில் எந்த ஊராட்சிக்கும் பாகுபாடு காட்டமாட்டார். அதேவேளையில், மிக நன்றாக செயல் புரியும் ஊராட்சிகளுக்கு கூடுதல் திட்டங்களை தருவார்.
தனக்கு அடுத்த நிலை அதிகாரிகள் தொடங்கி அடிமட்ட பணியாளர்கள் வரை ஒரே மாதிரியாக பழகுவார்.எங் கள் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்து பணியாற்றும் திட்ட இயக்குநர் இவர்தான்.
நாமும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் ஊராட்சி செயலர் மற்றும் பல்வகையான பணியாளர்களிடம் விசாரித்தோம். அனைவரும் ஒரே மாதிரியாகவே பதில் சொன்னார்கள்.
ஊராட்சி தலைவர்கள்,அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அனைத்து கட்சிகாரர்கள் என பரவலாக பேசினோம். சிலரை தவிர, பெரும்பான்மையானவர்கள் பாராட்டியே பேசினர்.
சிறப்பாக பணியாற்றும் இவரைப் போன்றவர்களை நமது இணைய செய்தி தளத்தின் சார்பாகவும் பாராட்டுகிறோம். தவறுகளை சுட்டி காட்டியும், நல்ல விசயங்களை பாராட்டியும் நமது பயணம் என்றும் தொடரும்.