தொழிலாளர் சங்கம்
மே தினம் தொடங்குவதற்கு மிகப் பெரிய விலையை உலக தொழிலாளர்கள் தந்துள்ளனர். அரசு நிறுவனங்களில் தொழிலாளர்களுக்காக போராடும் சங்கமாக இடதுசாரிகளே இருந்தனர்.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஆரம்பித்த பிறகு, தொழிலாளர் சங்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. ஆனால்,அரசு பணியாளர்கள் கட்சிகளை கடந்து பொது சங்கமாக உருவாக்கினர்.
அப்படிப்பட்ட பல்வேறு சங்கங்களில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கமும் ஒன்று. அதன் தலைவராக ஜான் போஸ்கோ பிரகாஷ் இருந்து வருகிறார்.
அவரைப்பற்றி அந்த சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் நம்மிடம் பேசினார். அதன் தொகுப்பு இதோ…
எங்கள் சங்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி செயலாளர்களில் 70 சதவீதத்தினர் உள்ளனர். மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி பல வெற்றிகளை பெற்றுள்ளோம்.
அனைத்திற்கும் மேலாக,காலமுறை ஊதியம் கிடைப்பதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றோம். முன்னாள் அமைச்சர் வேலுமணியை என்றும் ஊராட்சி செயலாளர்கள் மறக்க மாட்டோம்.
தலைமை கட்டிடம்
எங்கள் சங்கத்திற்கு தலைமை நிலைய கட்டிடம் கட்டுவதற்காக திருச்சி அருகே இடம் சுமார் இரண்டு கோடிக்கு அதிகமான முதலீட்டில் இடம் வாங்கி உள்ளோம். அதற்காக, இரவும் பகலும் பாராது பல இன்னல்களை தாண்டி சாதித்தவர் எங்கள் மாநில தலைவர்.
அந்த இடத்தில் சுமார் 18 கோடி அளவில் பல அடுக்கு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழாவை சிறப்பாக நடத்திவிட்டோம். அதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளது.
எந்த கடனும் வாங்காது, ஊராட்சி செயலாளர்கள் மற்றும் நல் இதயம் படைத்தவர்களின் பங்களிப்போடு செயல்படுத்த உள்ளோம். அதில் வரும் வருமானத்தின் மூலமாக, ஊராட்சி செயலாளர்களுக்கு பல்வகை நலத்திட்டங்களை தயாரித்து உள்ளார் எங்கள் மாநில தலைவர் என்று இடைவிடாது நம்மிடம் பேசினார்.
இந்த காலத்தில் உடன்பிறந்த அண்ணன் தம்பிகளே ஒற்றுமையாக இல்லாத நிலையில், 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் ஒற்றை மனிதன் மீது வைத்துள்ள நம்பிக்கை நம்மை ஆச்சர்யபட வைத்தது. ஜான்போஸ்கோ பிரகாஷின் உழைப்பிற்கு ராயல்சல்யூட். அவர்களின் சங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நமது இணைய செய்தி தளமும் என்றும் துணைநிற்கும்.