பாராட்டு – போராட்டம் – நெருக்கடி = ஒற்றர் ஓலை

தலைவா…நம்ம இணைய செய்தி தளத்தில் சிவகங்கை திட்ட அலுவலரை பாராட்டி வந்த செய்தி ஊரக வளர்ச்சித்துறை முழுவதும் எதிரொலித்தது.

ஆமாம் ஒற்றரே…எனக்கும் அந்த செய்தியை பற்றிய விசாரிப்புகள் அதிகம்.

பாராட்டு ஒரு பக்கம் என்றால்,போராட்டம் ஒரு பக்கம் தலைவா…

எங்கே ஒற்றரே…

திருவாரூர் மாவட்ட திட்ட இயக்குநரை எதிர்த்து பல்வேறு காரணங்களை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடத்தி உள்ளனர் தலைவா…

யாருக்கு நெருக்கடி ஒற்றரே…

தலைவா…மாதம் தோறும் உதவி இயக்குநர்களுக்கு சென்னையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகளின் விவரங்களை உடனே பதிவேற்றுங்கள் என ஊராட்சி செயலாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் நெருக்கடியாம்.

ஒற்றரே…ஊராட்சியின் அனைத்து செயல்களின் ஆனிவேரே ஊராட்சி செயலாளர்கள் தான். அவர்களின் செயல்பாடு சுணக்கம் ஏற்பட்டால், உதவி இயக்குநர்களுக்கு தலைமை அதிகாரிகள் கடுமை காட்டுகிறார்களாம்.

ஆமாம் தலைவா…அங்கே தங்களுக்கு கிடைத்த பாடத்தை ஊராட்சி செயலாளர்களை நோக்கி நெருக்கடியை கொடுக்க வேண்டிய நிலை உதவி இயக்குநர்களுக்கு ஏற்படுகிறதாம்.

அதைவிட ஒற்றரே…காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்களின் பணியிடங்களை நிரப்பாமல், கூடுதல் பணி பார்க்கும் ஊராட்சி செயலாளர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்குதாம் என சொல்லி விட்டு திரும்பினால், ஒற்றர் மாயமாய் மறைந்துவிட்டார்.

Also Read  சுற்றுலாத்தலமாக உள்ள ஊராட்சிகள்