தூய்மையான துரைச்சாமிபுரம்-பஞ்சாயத்து தலைவி ம.ஜெயலட்சுமி உறுதி

விருதுநகர் மாவட்டம்

வெம்பகோட்டை ஒன்றியம் துரைச்சாமிபுரம் ஊராட்சி தலைவி ம.ஜெயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ௯றிவிட்டு பேட்டியை ஆரம்பித்தோம்.

தேர்தல் வாக்குறுதியாக தடையில்லா குடிநீர்,தூய்மையான வாழ்விடம் என பல வாக்குறுதிகள் கொடுத்துள்ளேன்.

குறிப்பாக…பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே முதல் குறிக்கோள் ஆகும். அதற்குரிய பணியை ஆரம்பிக்கவேண்டும்.

நடைபெறும் பணிகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்முதல் இதுநாள்வரை பல பணிகளுக்கு சொந்த பணத்தையை செலவழித்து உள்ளோம்.

ஊராட்சிக்கான நிதியை விரைந்து ஒதுக்கீடு செய்யவேண்டும். அப்போதுதான்,மக்கள் பணியை தொய்வில்லாமல் செய்ய முடியும் என்றார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை உடனடியாக வழங்கவேண்டியது அரசின் முதல்கடமை ஆகும். விரைவில் நிதி வருமென நம்புவோம்.

செய்தியாளர்:- தமிழ்நம்பி

Also Read  செலுகை ஊராட்சி- சிவகங்கை மாவட்டம்