அனைத்து வசதியுள்ள அயன்நத்தம்பட்டி-தலைவர் முத்தையா சபதம்

அயன்நத்தம்பட்டி ஊராட்சி

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2815 ஆகும். இவர்களில் பெண்கள் 1432 பேரும் ஆண்கள் 1383 பேரும் உள்ளனர்

மக்கள்பணி

பஞ்சாயத்துதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்தையா அவர்களிடம் பேசியபோது…

எல்.இ.டி. விளக்கு ஊராட்சி முழுவதும் .பொறுத்து வருகிறோம். குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது.

வாறுகால் தூர் வாருவது, கிராமச்சாலை அமைப்பது போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.

மத்திய,மாநில அரசு நிதியை முறைப்படி பயன்படுத்தி அனைத்து வசதிகளும் உள்ள ஊராட்சியாக மாற்றி காட்டுவேன் என்றார்.

மக்கள் சேவையை தடையின்றி செய்ய நமது இணையத்தின் சார்பாக வாழ்த்தி விடைபெற்றோம்.

Also Read  குல்லூர்சந்தை ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்