இருக்கன்குடி ஊராட்சி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.இந்த ஊராட்சி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1969 ஆகும். இவர்களில் பெண்கள் 979 பேரும் ஆண்கள் 990 பேரும் உள்ளனர்.
கோவில்
இருக்கன்குடி ஊராட்சித் தலைவர் செந்தாமரை அவர்களுக்கு வாழ்த்து ௯றி உரையாடினோம்.
அப்போது அவர் ௯றியதாவது…
எங்கள் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் உடனடியாக செய்து முடிக்க பணிகளை ஆரம்பித்துவிட்டோம்.
குடிநீர்,சுகாதாரம்,வாறுகால் சுத்தம்,தெருவிளக்கு அமைத்தல்,கிராமச்சாலை அமைத்தல் என அனைத்து பணிகளையும் விரைவில் முடித்துவிடுவோம்.
குறிப்பாக…மிகவும் பிரபலமான இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை சுத்தமாகவும்,சுகாதாரம் நிறைந்த இடமாகவும் மாற்றுவதே லட்சியம்.
கழிப்பறை வசதி முழுமையாக செய்யவேண்டும்,கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துகொடுக்கவேண்டும்.
அற்புதங்கள் நிகழ்த்தும் அம்மன் கோவிலை அற்புதமாய் மாற்றுவேத குறிக்கோள் என்றார்.
செய்யும் செயல்கள் எல்லாம் வெற்றிபெற நாமும் வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.