கழுகர்கடை ஊராட்சி

  • கழுகர்கடை ஊராட்சி KALUKARKADAI Panchayat

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது கழுகர்கடை ஊராட்சி. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சியில், மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை உள்ளாட்சி தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3390 ஆகும். தற்போதைய நிலவரப்படி 3993 இவர்களில் பெண்கள் 2107 பேரும் ஆண்கள் 1983 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சியை உள்ளடக்கிய பகுதிகளாக அகரம், மன்னாரேந்தல், அகரம் காலனி, ஜோதிபுரம், பெருமாள்புரம், டி.அதிகரை, தட்டான்குளம் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது இந்த ஊராட்சி.

Also Read  எட்டக்காபட்டி ஊராட்சியில் தொடர்ந்து நடைபெறும் மக்கள் பணி