SNA கணக்கு பற்றி முதுகுளத்தூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர் ஒன்றியம்
உள்ள 46.ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கும்
ஊராட்சி கணக்கு:
SNS(சிங்கிள் நோடல் அக்கவுண்ட்)
சம்பந்தமானகலந்தாய்வு கூட்டம்
வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி திரு .அன்பு கண்ணன்.அவர்கள்
வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) திருமதி.ஜானகி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் 10.6. 2023.அன்று
சென்னை மறைமலைநகர் ஊரக வளர்ச்சி துறை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளரும் வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திரு.S.D.செந்தில்குமார் அவர்கள் சிங்கிள் நேடல் அக்கவுண்ட் மற்றும்
இணைய வழி ஆன்லைன்டாக்ஸ்
சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வந்தார்.
அவர் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி எடுத்தார்

மேலும் இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அவர்கள் கலந்து தெளிவான விளக்க உரையாற்றினார் தலைவர்களின் சந்தோகங்களுக்கு பதிலளித்தார்
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) திரு.ஜெயராமன்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கண்ணன்
திரு.உலகநாதன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் ஒன்றிய கூட்டமைப்பு செயலாளரும் அலங்கானூர் ஊராட்சிமன்ற தலைவர்
திரு.V.வினோத்குமார்
நன்றி கூறினார்

Also Read  அனுப்பப்பட்டு - தேனி மாவட்டம்