நலத்திட்டத்தோடு அடிப்படை பணியையும் செய்யும் நடராஜபுரம் ஊராட்சி
சிவகங்கை மாவட்டம்
நடராஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள
கோவினிப்பட்டி மற்றும் துவரம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள குளியல் தொட்டிகளில் ,தரைபகுதி,
உள் பகுதி சுவர்கள், வெளிபுற சுவார்கள் அனைத்திழும் விரிசல் விழுந்து சுவரின் ஒருபகுதி பூமிக்குள் உள்வாங்கி மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்தன.
போர்க்களம் அடிப்படையில் கோவினிப்பட்டி தொட்டியை மிகவும் வலுவானதாகவும், மிகவும்...
ஆ.தெக்கூர் ஊராட்சியில் விலையில்லா ஐந்து கிலோ அரிசி
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கூர் மற்றும் சிங்கமங்களப்பட்டி கிராமத்தில் உள்ள 370 ரேசன்அட்டை தாரர்களுக்கு ஐந்து கிலோ அரிசி விலையில்லாது வழங்கபட்டது.
பஞ்சாயத்து தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் திரு க.பழனியப்பன் இருவரும் இணைந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் தலைமையில்...
மழை காலத்தை வரவேற்க ஏரியை தூர்வாரும் ஏ.வேலங்குடி ஊராட்சி
நீர்மேலாண்மை
வேலங்குடி ஊராட்சி மலம்பட்டி கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான சின்னகுளத்து ஊரணி தூர்வாரும் பணிகள் ஊராட்சி மன்ற தலைவரின் உத்தரவின்படி துவங்கப் பட்டது.
இதுபோன்ற பணிகள் அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும்.
நீர்மேலாண்மையில் ஏரி,குளங்களை தூர்வாருவதே அடிப்படை ஆகும்.
அடிப்படை பணியை ஆரம்பித்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாரட்டுக்கள்.
மக்கள் பணியில் மருதுஅழகுராஜ் – திருப்பத்தூரில் தொடரும் சேவை
நிவாரணம்
கவிஞரும் பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ் அவர்கள் திருப்பத்தூர் தொகுதி முழுவதும் கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிப் பொருட்கள் வழங்கிவருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடிப்பட்டி, மெய்யபட்டி, உடையநாதபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளட்ட பகுதி வாழ் மக்களுக்கு 01-05-2020 அன்று நிவாரண பொருட்களை வழங்கினார் மருது அழகுராஜ்.
கொரொனா தடுப்பு பணியாளர்களுக்கு நடராஜபுரம் ஊராட்சி சார்பாக நிவாரண பொருட்கள்
சிவகங்கை மாவட்டம்
நடராஜபுரம்பஞ்சாயத்தில் கொரோன தொற்று நோயை பரவாமல்
தடுப்பதற்கு கடுமையாக உழைத்த
பஞ்சாயத்துநிர்வாகிகள் -6
சுகாதாரபணியாளர்கள் - 9
தன்னார்வலர்கள் - 6
தண்ணீர் தொட்டி பராமரிப்பாளர்கள் -8
தூய்மைபணியாளர்கள் - 5
கூட்டுறவு பணியாளர்கள் -3
என மொத்தம் 38 நபர்களுக்கும்,
அவர்களின் பணியை பாராட்டும் விதமாகவும், அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாகவும் மற்றும் அவர்களுக்கு நன்றி செலுத்தும்...
அள்ளிக் கொடுக்கும் ஊராட்சி தலைவர்
வாழ்த்துவோம்
9 ஊர் மக்களுக்கும் எங்கள் குடும்பத்தால் ஆன சிறு உதவி.
நடராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் "சந்திரா தமிழரசன்" அவர்களளது அன்பான அறிவிப்பு.
நாளை முதல் நமது பஞ்சாயத்தில் குடியிருக்கும் அணைத்து குடும்பம்களுக்கும் (9 ஊர்களுக்கும்) 10 கிலோ பொன்னி அரிசியை நமது நடராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் தன் சொந்த பணத்தில்...
ஆ.தெக்கூரில் ஊராட்சியில் நிவாரண பொருட்கள் விநியோகம்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெக்கூர், வடக்கூர், சிங்கமங்கள பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊனமுற்றோர் ஆதரவற்றோர் மற்றும் துப்புரவுபணியாளர்களுக்கும் ஊராட்சி தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி அவர்கள் இலவசமாக அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கினார் , மேலும் இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி...
ஆ.தெக்கூரில் ஆயிரம் பேருக்கு முக கவசம்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்தில் இருந்து இலவசமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் , பாதசாரிகளுக்கும் சுமார் 1000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை ஆ.தெக்கூரில் கபசுர குடிநீர்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தெக்கூர், வடக்கூர், சிங்கமங்களப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி தலைமையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் 12 வது வார்டு இந்திரா நகரில் குடியிருக்கும் 150 நரிக்குறவர்கள் குடும்பத்தினருக்கு கொரொனா காலகட்டத்தில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொருட்களை வழங்கினார்.
கவிஞரும்,பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ் அவர்களின் பணி பாராட்டத்தக்கது.
திருப்பத்தூர் தொகுதி முழுவதும் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார்.
தான் பிறந்த மண்ணிற்கு தன்னால் முடிந்ததை...