சிவகங்கை மாவட்டத்தில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக – ஒற்றர் ஓலை

அப்படிபட்ட அசைக்க முடியாத சக்தி யார் ஒற்றரே..

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் சிராஸ்தாரராக பல ஆண்டுகள் பணியாற்றி வருகிறார் சக்தி படைத்த பெண் ஒருவர்…

அட பரமேஷ்வரா…அப்படிப்பட்ட அதிகார ரகசியம் என்ன ஒற்றரே.

அது தெரியவில்லை தலைவா…மாவட்ட ஆட்சியர் இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவரை எதிர்த்து பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை..

இதற்கு முடிவு என்ன ஒற்றரே…

ஊரக வளர்ச்சித்துறை ஆணையரகம் வரை அவரை பற்றி தகவல் சொல்லபட்டுள்ளது.என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தொடர்ந்து கண்காணிப்போம்  தலைவா… மூன்றாண்டுக்கொருமுறை இடமாறுதல் இவர் விசயத்தில் என்னவானது. சங்கரபரமேஸ்வரி ஆதிக்கம் தொடருமா என கேள்வி கேட்டுவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஒற்றை மனிதனை நம்பும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம்