ஆட்டத்தை ஆரம்பித்த தவெக – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…அரசியல் செய்தியா?

ஆமாம் தலைவா…ஆறுமாதம் கழித்து புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களை பற்றி எழுதலாம் என்றுதான் இருந்தேன்.ஆனா…

என்னாச்சு ஒற்றரே…

தூய்மையான ஆட்சி என்று வசனம் பேசும் நடிகர் ஆட்சியில்…கட்சியினரின் அதிரடி ஆட்டம் ஆறே நாட்களில் ஆரம்பித்துவிட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு எங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்க கூடாது. கரெக்டான கமிசன் வந்த பிறகே எந்த டெண்டரும் விட வேண்டும் என உத்தரவு போடுகிறார்களாம் தவெக கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர்கள்..

இதுதான் அவர்கள் தலைவர் சொன்ன தூய்மையான ஆட்சிபோல…

இவர்களுக்கு பழைய ஆட்களே மேல் என்ற சிந்தனை சிறிது நாட்களிலே அனைவருக்கும் வந்துவிட்டது தலைவா..

இந்த செய்தியை கட்சியின் மேலிடத்திற்கு கொண்டு சேர்ப்போம். அடுத்து என்ன நடக்கிறது என தொடர்ந்து உளவு பாருங்கள் ஒற்றரே..

கண்டிப்பாக…எங்கே தவறு நடந்தாலும் ,யாராக இருந்தாலும் எல்லா விவரங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கடமையை தவறாது செய்வோம் என சொல்லி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  அனைத்து வருவாய் கிராமங்களிலும் இ சேவை மையம்