என்ன தான் நடக்குது மேலராஜகுலராமன் ஊராட்சியில் – வருவாய் துறை மீது எம்எல்ஏ ராஜவர்மனிடம் குற்றச்சாட்டு ஏன்?

 விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் அருகே கொரோனா பாதிக்கப்பட்ட எஸ்.திருவெங்கடபுரம் கிராமத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் நேரில் வருகை தந்து கபசுர குடிநீர் வழங்கினார்.

கொரோனா பாதித்த கிராமத்தில்
வருவாய் துறையினர் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு..என்று ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.

   அது குறித்து நாம் விசாரித்த போது, சில வீடியோக்களும் கிடைத்தது அதில் முழுக்க முழுக்க கிராம நிர்வாக அதிகாரியை குற்றம் சாட்டிய பதிவுகள் தான் அதிகம் வந்தது

இது குறித்து நாம் மேலும் விசாரித்தபோது.

இக்கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியர் என யாரும் வரவே இல்லை, எந்த ஒரு நிவாரணமும் நடக்கவில்லை,
சாதாரணமாக கிராம பஞ்சாயத்து அளவில் நடைபெறவேண்டிய சின்ன சின்ன மராமத்து பணிகளுக்கும் எங்களது கிராம நிர்வாக அலுவலர்  எதற்கெடுத்தாலும் சட்டப்படி என்பார் அல்லது உயர் அதிகாரி உத்தரவு என்பார் இதனால் பல நல பணிகள் தேக்கம் அடைந்துள்ளதுஎன்று கூறினார்கள்…

Vao
Vao

இதுகுறித்து மேல ராஜ குலராமன் கிராம நிர்வாக அலுவலர்  எக்ஸ் மிலிட்டரி வேலுச்சாமி அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்கு அவர் கூறியதாவது:-

மக்கள் கூறியது உண்மைதான் சார் நான் கிராம அலுவலர், அதாவது வருவாய் துறையின் கடைநிலை ஊழியன்….

நான் இந்த மேல ராஜ குலராமன் உட்பட்ட 18 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதுகாவலன்.

Also Read  என்னென்ன செய்யலாம் பஞ்சாயத்து தலைவர்

இங்கே பல அடிப்படை வசதிகள் கிடையாது என்பது எனக்கு நன்கு தெரியும்….
இதை நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளேன்,

மேலும் தற்போது ஊராட்சி ஒன்றிய கிராம பஞ்சாயத்து தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள்.

 அவர்கள் பஞ்சாயத்தில் தீர்மானம் போட்டு அதை முறைப்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து, அதிகாரிகளின் உத்தரவின் பேரில் எந்த வேலையும் செய்து கொண்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்பது என்னுடைய கருத்து….

   ஆனால் ஒரு சிலர் சின்ன சின்ன வேலைகளுக்கு எல்லாம் தீர்மானம் போடுவதா….? என்று என்னிடமே கேட்கிறார்கள்.

  நான் என்ன பதில் சொல்வது…? நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் நான் தானே பதில் சொல்லவேண்டும்..
உதாரணத்திற்கு குண்டு குழியுமாக இருக்கும் ரோடுகள் சாலைகள் நீர் தேங்கும் பகுதிகளில் மண்ணை கொட்டி சமப்படுத்துவது என்று வைத்துக்கொள்வோம்.

Vao
Vao

   அதற்கு ஒரு இடத்தில் இருந்து மண் எடுத்து வரவேண்டும் அது முறையாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தெரிவித்து விட்டு மண் எடுத்து வந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது.

 ஆனால் நம்முடைய சௌகரியத்திற்காக சின்னச்சின்ன சட்ட மீறல்களை செய்தால், நாளை பல வகையில் சிக்கல் உண்டாகும்.

எங்கள் பகுதியில் அடிப்படை பிரச்சனைகள் அதிகம் தான், மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டிய பகுதி என்பதால் நான் மிகவும் கவனத்துடன் இருப்பது மற்றவர்களுக்கு சங்கடத்தை உண்டு பண்ணுகிறது என்று கூறினார்… முன்னாள் ராணுவ வீரரான கிராம நிர்வாக அலுவலர் வேலுச்சாமி…

Also Read  தலைவர் பதவி அதிகாரம் அல்ல..மக்கள் சேவை- உரக்க சொல்லும் பேராசிரியர்

எல்லாம் சரிதான் சின்ன சின்ன வேலைகளுக்கு எல்லாம் உயர் அதிகாரிகளை தேடி செல்வது என்பது பொருந்தாத விஷயம் தான்.

இருந்தாலும் அதற்கு இவர்களைப்போன்ற கடைநிலை அதிகாரிகளிடம் சில அதிகாரங்களை பகிர்ந்து கொடுத்தால், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் என்பதும் உண்மை தான்.

  ஆனால் இதில் ஊழல்கள் மலிந்து விடும் என்கின்ற ஒரு ஐயப்பாடு உள்ளது. எனவே இது ஒரு இடியாப்பச் சிக்கல் மிகுந்த பிரச்சனை என்பது மட்டும் புரிகிறது….

இதுபோன்ற செய்திகளை மட்டும் பரபரப்பாக வெளியிட வேண்டும் என்பது நமது “tnபஞ்சாயத்து செய்தி” சேனலின் நோக்கமல்ல….

ஆனால் தமிழக கிராம மக்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதே நமது பிரதான நோக்கமாகும்.

கொரோனா யுத்தம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கிராம நிர்வாக யுத்தமும் இரண்டறக் கலந்து விட்டது என்பது மட்டும் உண்மை…..

இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தை செலுத்தி யாருக்கும் பாதகமில்லாமல் மக்கள் நலனை மனதில் கொண்டு சிறப்பாக செயல்பட  வேண்டிய கட்டாயம் உள்ளது…வந்தது.