ராக்கன் ஊராட்சி

ராக்கன் ஊராட்சி /Veerakkan Panchayat

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டாரத்தில் அமைந்துள்ளது ராக்கன். இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1600 ஆகும். தற்போதைய நிலவரப்படி 1810 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 829 பேரும், ஆண்கள் 881 பேரும் உள்ளனர்.

இங்கு புகழ்மிக்க வலம்புரி ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஐயனார் கோயில், சாலியங்கோவில் அக்னிவீரன் கோயில், விநாயகர் கோயில், மாரியம்மன் கோயில், ஆதிபராசக்தி கோயில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மஹாசிவராத்திரி அன்று ஐயனார் கோயிலில் ஊர்கூடி விமர்சியாக திருவிழா நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர் திருநாள் (கரிநாள்) அன்று கிராமத்து இளைஞர்களால் தமிழர் திருநாள் கொண்டாடப்படும் இந்த நிகழ்வில் சிறுவர், சிறுமிகளும், இளைஞர்,இளைஞிகளும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.

Also Read  வஞ்சினபுரம் ஊராட்சி