தொழிலாளர் வேதனை
விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் படம் லாபம். இடதுசாரி சிந்தனை கொண்ட எஸ்.பி.ஜனநாதன் இயற்கை,ஈ,பேராண்மை,புறம்போக்கு போன்ற படங்களை அடுத்து இயக்கும் படம்.
தயாரிப்பாளர் தமிழ்மணி
கமலின் மகள் சுருதி கதையின் நாயகி ஆகவும், ஜெகபதிபாபு வில்லனாகவும் நடித்து வரும் படத்தில் பிரபல தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
பாலாவின் நான் கடவுள் படத்தில் ஆர்யாவுக்கு அப்பாவாக சிறப்பாக நடித்திருந்தாலும் தொடர்ந்து வாய்ப்பு வரவில்லை. இந்த படத்திலிருந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பிப்பார் என்கின்றனர் இந்த படத்தில் பணிபுரியும் உதவி இயக்குனர்கள்.
விவசாயிகளின் வியர்வையை உலகிற்கு சொல்லவரும் லாபம் மிகப்பெரிய லாபம் அடையட்டும்.