நன்றி…நன்றி…
நன்றி!நன்றி!நன்றி
*நவம்பர்-01 ம் தேதி உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு தமிழகமெங்கும் கிராம சபைக்கூட்டங்கள் நடத்திட உத்தரவிடப்பட்டது அனைவரும் அறிந்ததே!*
*இந்நிலையில் ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்களும் தீபாவளிப்பண்டிகையை சிறப்பாக கொண்டாட நவம்பர்-01கிராம சபையை ஒத்திவைக்க நமது அமைப்பின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையினை உடனடியாக ஏற்று..
*கோரிக்கையில் உள்ள உண்மைதன்மை கருதி உடனடியாக நவம்பர்-01 ம் தேதிய கிராம சபைக்கூட்டத்தை ஒத்திவைக்க ஆணையிட்ட மதிப்புமிகு ஊரகவளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர் அவர்களுக்கும்,மதிப்புமிகு இயக்குநர் அவர்களுக்கும்,மதிப்புமிகு கூடுதல் இயக்குநர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில மையத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்!
நன்றியுடன்TNPSA-SRG-DGL-09-20,மாநில மையம்
இந்த ஒரு செயல் மட்டுமல்ல, பல அதிகாரிகளுக்கு மிகச்சரியான நேரத்தில் பதவி உயர்வு கிடைத்திட செய்து, ஓய்வூதியத் தொகை அதிகமாக கிடைத்திட வழிவகை செய்துள்ளார் என ஒரு மாவட்ட அதிகாரி நம்பிடம் கூறினார். எத்தனையோ இயக்குநர் மத்தியில் இவர் எங்களின் இயக்குநர் மட்டுமல்ல, மக்களுக்கான இயக்குநர் என்றார்.
ஊரக வளர்ச்சித்துறையில் அடிமட்ட பணியாளர் தொடங்கி மாவட்ட அதிகாரிகள் வரை வாழ்த்தும் இயக்குநர் பி.பொன்னையா இஆப அவர்களுக்கு நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.
ஊராட்சி செயலாளர்களின் முக்கிய கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பு பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டும் செயலையும் இயக்குநர் செய்து முடிப்பார் என உறுதியாக நம்புகிறோம்.