தலைவா…நான் இதுவரை அறிந்து வந்து சொன்ன விசயத்திலேயே வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் முக்கியமானது.
ஒற்றா…விசயத்த சொல்லும். உண்மையா….பொய்யா என சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பார்த்துக் கொள்ளட்டும்.
சரி தலைவா… கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் கட்டிட அனுமதி என்பது, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் உடனே வழங்க வேண்டும்.ஆனா, வில்லுப்பட்டி ஊராட்சியில் விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டிட அனுமதியை தொடர்ந்து கொடுத்து வருகிறார்களாம் தலைவா...
அவ்வளவு தானா ஒற்றரே…
இன்னும் ஒரு தகவல் தலைவா…வில்லுப்பட்டி ஊராட்சியில் உள்ள குங்கிலிய மரங்களை வெட்டுவற்கு ஊராட்சி உறுப்பினருக்கே தெரியாமல் டெண்டர் விடப்பட்டுள்ளதாம். ஊராட்சிக்கு 11லட்சம் வருமானமாம். ஆனா, அனுமதி கொடுக்கப்பட்ட மரங்களை தாண்டி பல மடங்கு மரங் கள் வெட்டப்பட்டுள்ளதாம்.
இந்த இரு விசயங்கள் பற்றி முதல்வர் உட்பட துறைசார்ந்தும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வியை கேட்டுவிட்டு மாயமாய் மறைந்தார் ஒற்றர்.