தலையை சுற்றி தொடுவது போல தூய்மை காவலர்களுக்கு சம்பளம்

காவலர்கள்

கொரோனா தொற்று வந்த காலகட்டத்தில் உயிரையும் துச்சமென மதித்து பணிபுரிந்த காரணத்தால் தூய்மை பணியாளர்கள், இனி தூய்மை காவலர்கள் என அழைக்கப்பட்டனர்.

அப்படிப்பட்ட தூய்மை காவலர்களுக்கு ஊராட்சியில் வழங்கப்படும் சம்பளம் 5ஆயிரம் ரூபாய்.. அந்த சம்பளம் நேரடியாக வழங்கப்படுவது கிடையாதாம்.

ஊராட்சியின் 8வது கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படும். அந்த தொகை மற்றொரு கணக்கிற்கு மாற்றப்படும்.

தூய்மை பணியை கவனிக்க நியமிக்கப்பட்ட பணியாளர் சம்பளத்துக்குரிய தீர்மானத்தை  நிறைவேற்ற வேண்டும். அதன்பிறகு, அனைவருக்கும் ஒற்றை காசோலையாக வங்கியில் கொடுக்கப்பட்டு , அவரவர் கணக்கிற்கு வரும்.

குறைந்த பட்சம் பத்து நாட்களுக்கு பிறகு வந்து சேரும். சில மாத சம்பளம் அந்த மாதக் கடைசியில் தான் கிடைக்குமாம். பேரிடர் காலத்தில் கால்களுக்கு பூசை செய்வது இருக்கட்டும். ஒழுங்காக சம்பளத்தை நேரடியாக வரவு வைக்க வழி செய்தாலே போதும் என்கின்றனர்.

அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதே சரியான செயல் ஆகும். அதைவிட, ஊழியத்தை குறைந்த பட்சம் 10 ஆயிரமாக உயர்த்துவது அவசியம் ஆகும்.

 

Also Read  முதல்வரும்- ஊராட்சி தலைவரும்..ஓர் ஒப்பீடு