சிவகங்கை ஊரக வளர்ச்சித் துறையில் ஒரு ஆல் இன் ஆல் டிரைவர் – ஒற்றர் ஓலை

தலைவா…ஏற்கனவே நான் சொன்ன தகவலில் தொடர்ச்சியாக முக்கிய செய்தி.

என்ன ஒற்றரே…என்ன தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் பிடிஓ க்கள் இடமாற்றத்தில் அதிருப்தி இருப்பதாக சொன்னேன் அல்லவா.அந்த காரியத்தை கச்சிதமாக முடித்தது சம்மந்தப்பட்ட அதிகாரியின் ஓட்டுநராம்..

என்ன ஒற்றா…ஒரு ஓட்டுநருக்கு அவ்வளவு பவரா…

தலைவா…தற்காலிக உதவியாளராக இருந்த அந்த ரஞ்சிதமான நபர், எந்த வழியிலோ நிரந்தர ஓட்டுநராக பணியில் அமர்ந்ததே புரியாத புதிராக உள்ளதாம். அந்ந நபர் சொல்வதை உயர் அதிகாரி வேதவாக்காக கேட்கிறாராம். பிடிஓ க்கள் இடமாற்றத்தில் ஓட்டுநரின் கையே ஓங்கி உள்ளதாம்.இந்த ஓட்டுநருக்கு பிடிஓக்களே பயப்படுகிறார்களாம் தலைவா…

இந்த செய்தி நேர்மையான மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெரியுமா. பாவம் பிடிஓக்கள்.

நாம் திரும்பி பார்ப்பதற்குள் ஒற்றர் மாயமாய் மறைந்து விட்டார்.

Also Read  மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட கிராமசபை கூட்டம்