ஊரக வளர்ச்சித்துறையில் உலவும் கடிதம் – ஒற்றர் ஓலை

உள்ளக்குமுறல்

*கொஞ்சம் மாறலாம் பாஸ்..*

*ChatGPT, Artificial intelligence, GPS base survey apps, distance calculation app என உலகமே தொழில்நுட்ப மேம்பாடுகளை பயன்படுத்தி புலிப்பாய்ச்சலில் பறக்க, இந்த ஊரக வளர்ச்சி துறை மட்டும் பழைய கால ஸ்லேட்டு பென்சில் முறைகளை பயன்படுத்தி….*

என்ன சொல்ல வர்றோம்னு புரியுதுங்களா?

சமீப காலமாக தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஆய்வு கூட்டங்கள் எப்படி நடக்குது தெரியுமா?

Addl Collectors, PDs, ADRDs, EEs, AEE எல்லோருமே meeting போறப்ப ரெண்டு கைலயும் பழைய கால கட்டைப்பை நிறைய அழுக்கு காகிதங்களை சுமந்துட்டு போறதும்.. மீட்டிங் ஹால்ல உட்கார்ந்து அவங்களுக்கு முன்னாடி மலை மாதிரி காகித குவியலை வைத்து. பரிதாபமா காலைலேர்ந்து ராத்திரி வரை உக்காந்துருக்கறதும், அதில் இருந்து தலை தெரியாத அளவுக்கு எட்டி எட்டி பாத்து பதில் பேசறதும்…

என்ன தான்பா இந்த ஊரக வளர்ச்சி துறைல நடக்குதுன்னு விசாரிச்சா…

இப்பல்லாம் Spiral booklet review நடக்குதாம்..

இப்ப வந்திருக்கற RD செகரெட்டரி.. எல்லா பணிகளையும் ஒரு பெயர் விடாம பேப்பர்ல கட்டம் போட்டு அதை ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பைரலு புக்லெட்டு போட்டு எழுதி வைக்க சொல்லிருக்கறாராம்..

உதாரணத்துக்கு திருவள்ளூர் மாவட்டத்துல… பூந்தமல்லி ஒன்றியத்துல… So called ஊராட்சில கந்தசாமின்னு ஒருத்தருக்கு ஒரு இலவச வீடு கொடுத்துருக்கீங்க..

அதே ஊர்ல பாலசாமின்னு இன்னொருத்தருக்கு இன்னொரு இலவச வீடு..

இப்படி அந்த ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கற 20 ஊரட்சிலயும் ஒரு 274 பேருக்கு வீடு கொடுத்துருக்கு.

இந்த 274 பேர் பேரையும் ஒவ்வொரு பக்கமா எழுதிகிட்டு… அதை ஒரு Spiral booklet போட்டுக்கனுமாம்.

இதே போல ஊராட்சி வாரியா ஒரு workwise புக்லெட்டு,
ஊராட்சி ஒன்றிய வாரியா KKI புக்லெட்டு, பழைய வீடு ரிப்பேரு புக்லெட்டு, ஊராட்சி பயனாளி வாரியா சிமென்டு ஸ்டீலு கொடுத்த புக்லெட்டு, பிரதமர் வீட்டுக்கு ஒரு புக்லெட்டு

ரோடு பிரிட்சுக்கு ஒரு புக்லெட்டு
இஸ்கூலுக்கு ஒண்ணு,
சிமென்ட்ரோடுக்கு ஒண்ணு,
அயோத்திதாசர்க்கு ஒண்ணு, அண்ணா மறுமலர்ச்சிக்கு ஒண்ணு, ட்ரைபல் ஸ்கீமுக்கு ஒண்ணு, ஸ்மார்ட் கிளாஸ்க்கு அங்கன்வாடிக்கு ஒண்ணொண்ணு, பொதுநிதிக்கு ஒண்ணு, மாவட்ட ஊராட்சிக்கு ஒண்ணு, OHT கணக்கா ஒரு புக்லெட்டு….. இதுக்கொண்ணு அதுக்கொண்ணுன்னு பதினைஞ்சு இருபது புக்லெட்டு ஒரு ஒன்றியத்துக்கே..

இதுல்லாம ஓவர்சீயர் வாரியாக அனைத்து பணிக்கு ஒண்ணு, எஞ்சினியர் வாரியாக ஒண்ணு, ஜோனல் டெப்ப்ப்பூடிக்கு ஒண்ணு…

உஸ் யப்பாடி, இப்படி ஒரு ஒன்றியத்துக்கு இருபத்தஞ்சி முப்பது புக்லெட்டு வீதம் ஒரு ACக்கு முன்னூறு புக்லெட்டு, EE க்கு முன்னூறு,
ஒரு AEE க்கு 200 புக்லெட்டுன்னு…
ஊரக வளர்ச்சி அலுவலகங்கள் எங்கும் புக்லெட்டு மயம்.

Also Read  ஈரோடு மாவட்டத்தில் பெரிய ஊராட்சி

இதை வெச்சுட்டு என்னாடா பண்றீங்க ஆபீசருங்களான்னு ஒரு EE கிட்ட கேட்டா, அவரு பேந்தபேந்த முழிக்கறாரு. இவங்க இந்த புக்லெட்டால யூஸ் இல்லன்னு எதுத்தும் பேச மாட்டாங்க பாவம்..

இதுக்கு நடுல வாரம் ஒருமுறை சனிகிழமைல AE, Overseer, AEE, EE, APO, AC, PD சுத்தி உக்காந்து…

அந்த கந்தசாமிக்கு கொடுத்த வீடு என்னா ஸ்டேஜூ, எண்ணிக்கு யாரு அந்த வீட்டை கடைசியா பாத்தீங்கன்னு கேட்டு இவங்க எல்லாரும் அவங்கவங்க புக்லெட்டுல அந்த கடைசியா பாத்த டீட்டெயிலை கையால எழுதி கையெழுத்து போட்டு வெச்சுகிட்டு, மெட்ராசு மீட்டிங்க்ல ACS RD, DRD கிட்ட காமிப்பாங்களாம்.

அவர் குட், பேட், யூஸ்லெஸ்னு இதை வெச்சு திட்டுவாராம். இந்த புக்லெட்டு கணக்கை வெச்சு ரேங்க் போட்டு கூட்டம் முடிஞ்சு கலெக்டருங்களை வேற பத்தி விடுவாராம்.
இவ்ளோ தானாம்..

அட முட்டாபீசுங்களா ..

இதற்கு தான் தாரேஷ் அகமது சார் DRDயா இருக்கப்போவே Inspection App னு பல லட்சம் செலவு செஞ்சு ஒரு நல்ல மொபைல் செயலி உருவாக்கி எல்லோரும் மொபைல்ல தூக்கிட்டு திரியறோமே..

அதில் கொஞ்சம் concentrate செய்து, அனைத்து பணிகளையும் AE, overseer, AEE, EE AC PD பார்வையிடும்போதேஅதில் நமது stage remarks, stage completion, probable date of completion எல்லாம் description தெளிவாக எழுதி வந்துட்டாலே போதுமே.

இந்த inspection appல செய்ய வேண்டிய ஒரே update…

1. இந்த inspection app ல actual stage update பண்ணுனா, tnrd websiteலும் stage update ஆகற மாதிரி sync பண்ணனும்.
2. தினமும் கள அளவில் பார்வையிடும் பணிகள் (ஊராட்சிகளில் கட்ட பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட), இதர துறை பணி என இந்த ஆப்பில் பதிவேற்றம் செய்வது மாதிரி மாற்றி யோசித்தால் தகும்.
2. மாதாமாதம் datewise timewise நமது சுற்றுபயணங்களை தொகுத்து அடுத்த மாத ஆரம்பத்தில் AE, Overseer DyBDO, BDO, AEE tour diary ஆக தேதி வரிசையில் தொகுத்து print எடுக்கும் வசதி

இந்த ஒண்ணு ரெண்டு வகைல inspection app update & sync செஞ்சாங்கன்னா திட்டம் app, NREGS officer app னு மற்ற செயலிகள் எதுவுமே தேவைபடாது.

ஒரே app, multiple uses..

மீட்டிங்ல Pt wise ஒவ்வொரு திட்ட வாரியா யார் என்னிக்கு பாத்தாங்க, என்ன குறை, எப்ப பணி முடியும்னு பிரிச்சு மேஞ்சு ரிவ்யூ பண்ணிடலாம். Poor progress, delayed work எல்லா வகைலயும் இதை வெச்சே பிரிச்சு பிரின்ட் அவுட்டோட மீட்டிங் பயனுள்ள வகைல நடத்தலாம்.

Also Read  ஆன்லைன் வரிவசூல் -அரைகுறையான அரசு உத்தரவு

இவ்வளவு அட்வான்சா, எளிமையா, யாருக்கும் கஷ்டம் கொடுக்காம தெளிவா மக்கள் நலபணிகளை செய்யறதை விட்டுட்டு, மன்னர் ஆட்சி காலத்து ஸ்லேட்டு பென்சிலும், பிரிட்டீஷ் காரன் காலத்து பேப்பர் புக்லெட்டு ரிப்போர்ட்டையும் கட்டிட்டு அழுவறதும், அதை விட இந்த உதவாத வேலையை தினம் தினம் ரெண்டு மூணு மணி நேரம் வெட்டியா வேஸ்ட்டு பண்ணி புக்லெட்ல ஒவ்வொரு அதிகாரியும் கைப்பட எழுதறதும்…

இந்த ஹைதர் அலி கால spiral book ல குறிக்கறதும், அதை இந்த பாவப்பட்ட AC PD EE ஆகியோர் மெட்ராஸ் வரை தூக்கி சுமக்கறதும், அதை ஒரு தலைமைசெயலாளர் நிலையில் ஆய்வு பண்றதும்…

எவ்ளோ time waste, manpower waste,

இதானா்யா உங்க டக்கு?

பாவம்தான். இந்த AC PD, EE ங்க. இவங்க குறைகளை யார்ட்டயுமே சொல்லவும் மாட்டாங்க, மறந்தும் எதிர்த்து பேச மாட்டாங்க.

நம்ப RD secratary போன்ற ஸ்ட்ரிக்ட் அதிகாரிகள்.. யாராவது ஒரு அதிகாரி அவங்களை எதுத்து பேசுனாலே அடுத்து ரெண்டு நாளைக்கு அவரையே டார்கெட் பண்ணி குத்தி குத்தி மீட்டிங் நடத்தறதால நம்மாளுங்க பயந்துகிட்டு எவருமே எதிர்த்து பேசாம ஸ்பைரல் பைண்டு நோட்ல…

ஒண்ணாங்கிளாஸ் படிக்கற குழந்தைங்க வீட்டுபாட ஹோம் ஒர்க் பண்ற மாதிரி எழுதிட்டு, மெட்ராசுக்கு ரெண்டு கைலயும் தீபாவளி பலகாரம் விக்கற மாதிரி கட்டைப்பை தூக்கிட்டும் திரியறாய்ங்க..

எங்கூரு கலெக்டரேட்டு முன்னாடி இருக்கற ஸ்பைரல் புக்லெட்டு போடற கடைகாரரு லட்சகணக்குல சம்பாரிச்சது ஒண்ணு தான் இதுல கிடைச்ச ஒரே பலன்..

தம்பிங்களா.. மத்த துறைலாம் எளிய வகையில் பணி செய்வதை நோக்கி அறிவியல் வளர்ச்சி துணையுடன் crop survey app, GPS agri app, Engineering plan app, Grievance settlement app ன்னு பறந்து போறாய்ங்க..

நம்ம ஊரக வளர்ச்சி துறையை மட்டும் பழைய ஸ்லேட்டு பல்பத்து காலத்துக்கு அழைச்சிட்டு போறாரு நம்ப செகரட்டரி..

கொஞ்சம் மாறுங்க பாஸ்.

ஆனா பாருங்க.. வீணாப்போன அத்தனை மத்த டிபார்ட்மெண்ட் வேலையெல்லாம் நம்மை செய்ய சொல்லிட்டு நம்பாளுக வேலையே பார்க்கறதில்லைன்னு நெஞ்சுல ஊசி குத்தறானுக… மத்தவனுகளை மானே தேனேன்னு கொஞ்சறாங்க..

முதல்ல அடிமூட்டைக்கும் அடிமூட்டையாய் கிடக்கும் எங்களை கைதூக்கிவிடுங்க பாஸ்..

நீங்க நல்லவனுகன்னு சொல்லிட்டு மூட்டை மூட்டையாய் இன்னமும் பொதி ஏத்துவதை விடுங்க பாஸ்..

ஏற்கெனவே ரொம்ப வலிக்குது…பிக்பாஸ்

இப்படிக்கு

எடிசன் வீட்டு எலிக்குட்டி

இப்படி காமெடி கலந்த கண்ணீர் கடிதம் மிக வேகமாக உலா வருகிறது.