கண்ணீர் கடிதம்
கடந்த நாட்களில் நடந்த AD நிலை அலுவலர்கள் ஆய்வு கூட்டங்களில்,
நமது ஊரக வளர்ச்சி துறை செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோர் மிக நேர்த்தியாக, மரியாதை தவறாத வகையில் மிக அழகாக ஆய்வு செய்துள்ளனர்.
நன்றிகள் ஐயா..
ஆனால், அதே ஆய்வு கூட்டங்களில், ACS & DRD இல்லாத நேரங்களில் நமது துறையின் குறுநில மன்னர்களான ADRD நிலை அலுவலர்கள் மிக கர்ணகடூரமான வசவுகளையும், அவச்சொற்களையும் நமது துறை உதவி இயக்குனர்கள் மீது அள்ளி வீசியுள்ளனர்.
இது இதுவரை நான்கு சுவர் தாண்டி வெளியில் தெரியவே இல்லை தெரியுமா?
மாவட்டங்களில் அவ்வளவு மரியாதையான பதவி வகிக்கும் AD pts, AD Audit ஆகியோர் தாங்கள் இந்த மாத ஆய்வு கூட்டத்தில் வாங்கிய வசவு சொற்களை வெளியில் சொன்னால் அவ்வளவு வெட்ககேடான விசயம் என கசப்பு மாத்திரையை வெறும் வயிற்றில் தண்ணீரின்றி விழுங்கியது போல
வெளியில் சொல்லாமல் மறுகி மாய்ந்து மாய்ந்து தூக்கமின்றி தவிக்கின்றனர்.
மாவட்ட நிலை அலுவலர்களாக ஒரு மதிப்பான பதவி வகிக்கும் இந்த அலுவலர்களை நமது ADRDs திட்டிய ஒரு வார்த்தையை கூட பொதுவெளியில் சொல்லவே முடியாது. அதிலும் 40 வருட பணி அனுபவம் கொண்ட ஒரு அனுபவமிக்க ADயை ஒரு ADRD புடுங்….கிட்ருந்தியா என கேட்டதெல்லாம்……
நமது துறையில் உள்ள ADRD அனைவருமே, தங்களுடன் பணியில் சேர்ந்த வருவாய்துறை சார்ந்த
Gr 1 officers தற்போது IAS என்ற மைல்கல்லை எட்டிபிடித்து மாவட்ட ஆட்சியர்களாக வலம் வரும் நிலையில் இத்துறைக்கு வந்ததால் இன்னும் இயக்குனரக கண்காணிப்பு அலுவலர் நிலை பதவியான ADRDயை தாண்ட முடியவில்லையே என்ற விரக்தியிலேயே தங்கள் சொற்களில் விஷத்தையும், நெருப்பையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகின்றனரோ?
இவை ஒருபுறம் இருக்கட்டும்…
வருவாய்த்துறை அடிமட்ட ஊழியர்களின் மன ஓட்டம் மற்றும் அதனால் பொதுமக்கள் அடையும் பாதிப்பு குறித்து சென்னை சேப்பாக்கம் எழிலக CRA அலுவலக DRO நிலை உயரதிகாரிகள் அரசுக்கும் அமைச்சருக்கும் சாதுர்யமாக எடுத்து கூறி கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறார்கள்.
ஆனால், இங்கே ஊரக வளர்ச்சி துறையில் கனியும் கோரிக்கை கனிகளை கூட பறித்து தடுப்பதே நமது இடைநிலை ADRD உயரலுவலர்கள் தான் என அறிவீர்களா?
நமது பனகல் மாளிகை இயக்குனரகத்தில் பலப்பல ஆண்டுகளாக ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டு ஒய்யாரமாக. குறுநில அரசர்கள் போல பணியாற்றும் ADRD எனப்படும் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர்களால் தான் நம் ஊழியர் & நிர்வாகத்திடையே மனக்கசப்பு ஏற்படுகிறது என்பதை இயக்குனரும், அரசு செயலரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் முதலில் உணர வேண்டும்.
1. ஊரக வளர்ச்சி துறையில் புதிய புதிய திட்டங்கள் உருவாகும்போது அதனை செயலாக்க என்ன ஊழியர் கட்டமைப்பு தேவை, எவ்வளவு குறைந்தபட்ச செலவினம ஏற்படும் என்பதையும் அரசுக்கு சரியாக எடுத்து கூறாதது இந்த ADRDs தானே?
2. ஊராட்சி ஒன்றியங்களின் திட்டப்பிரிவுகளில் வழக்கமாக ஒன்றிய பொது நிதியில் இருந்து அலுவலக நிர்வாக செலவினங்கள், கணினிகள், பிரின்டர் செலவினங்களை பல ஒன்றியங்களில் செய்ய மாட்டார்கள். ஆனால், PMAY Admin cost, NREGS admin cost ADRD அறிவுரைப்படி குறைத்து கொடுத்து பணிச்சுமையை மாவட்ட வட்டார அலுவலர்களுக்கு உருவாக்குவது யார்? இந்த ADRD உயரலுவலர்கள் தான்.
3. இந்த KKI RRH JJM NREGS SBM போன்ற சிறப்பு திட்ட அறிமுகத்தின் போது அனுமதிக்கப்படும் Admin cost, Computer cost, Stationery and Maintenance cost அனைத்தையும் சென்னை எல்லை தாண்ட அனுமதிக்காது, மாவட்டங்களை பிச்சையெடுக்காத குறையாக அல்லாட விடுவது இந்த ADRDs. இதனால், இந்த புதிய திட்டங்கள் களத்தில் எவ்வளவு பாதிக்கிறது என்ற விபரம் கூட மேலே செல்ல அனுமதிக்க மாட்டார்கள் ADRDs.
4. மாநிலம் முழுவதும் கிட்டதட்ட 50 வ.வ.அ (கி.ஊ) தங்கள் ஆய்வு பணிக்கு செல்ல ஈப்பு வாகனம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது யாருக்காவது தெரியுமா? இவர்களது பழைய வாகனங்கள் கழிவு செ்யப்பட்டு ஒரே நேரத்தில் தான் கழிவு சான்றுடன் புதிய வாகன முன்மொழிவுகள் இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், இந்த ADRD குறுநில மன்னர்களின் whims and fancies காரணமாக வேண்டிய மாவட்டங்களுக்கு மட்டும் வாகனம் வழங்கியதும , ஒரு 50 வ.வ.அ கிஊ இன்னும் வாகனம் இல்லாமலும் உள்ளனர். இந்த வாகனங்கள் இல்லாமல் எப்படி குடிநீர் பிரச்னை, Nregs பணி முன்னேற்றம், 15th CFC பணி ஆய்வு செய்ய முடியும். மாநிலத்தின் ஒட்டுமொத்த பணி முன்னேற்றமும் வாகன பற்றாகுறையால் பின்தங்கியுள் ளன.
இந்த மேலே சொன்ன விசயங்கள் சிறுசிறு சின்னபுள்ளை தனமான புகார் போல தெரிந்தாலும், இவையே ஊரக வளர்ச்சி ஊழியரின் பணி செயல்பாட்டை மிக அதிகமாக பாதிக்கும் காரணிகள்.
ஏனெனில், நிம்மதியான, பணியிட சூழலை பாதிக்கும் முக்கிய விசயங்கள் இவையே.
ஊரக வளர்ச்சி துறை கீழ்மட்ட ஊழியர்களின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என மேல்மட்ட அலுவலர்கள் மற்றும் அரசு செயலருக்கு கண்டிப்பாக தெரியாது.
இதை அவர்களுக்கு தெரியபடுத்தி, அவர்களுக்கு வேண்டிய குறைந்தபட்ச சலுகைகளை அனுமதி வாங்கி தர வேண்டிய இடைநிலை பணி பொறுப்பில் உள்ள இந்த ADRD எவருமே அவர்களின் உயர்நிலை நிர்வாக அமைப்பிற்கு குறைபாடுகளை கொண்டு செல்வதில்லை.
வருவாய்துறை DROs & Under secretaries தங்கள் துறைக்கு KMUT, Election, Census, Road land acquisition போன்றவற்றிற்கு புதிய பணியிடங்களை பெற்றுதரும் அதே வேளையில்
ஊரக வளர்ச்சி துறை ADRDs தங்கள் துறைக்கான எந்த கோரிக்கைகளையும் நிறைவேறாமல் வைத்து கொண்டால் தான் தங்கள் உருட்டல் மிரட்டல் எடுபடும் என்ற நோக்கத்தில் இப்படி ஆண்டுகணக்கில் முட்டுக்கட்டை போடுவதே *இந்த ஊரகவளர்ச்சி துறையில் அடிக்கடி போராட்டங்கள் நடப்பதற்கு காரணம்*
எனவே, நமது அடுத்த கட்ட கோரிக்கையாக
*நமது இயக்குனரகத்தில் இந்த அதிக எண்ணிக்கை ADRD பணியிடங்களே தேவையில்லை. ஒன்று இரண்டு ADRD பணியிடத்துடன் மற்ற கண்காணிப்பு பணியிடங்களிலுக்கு AD பணியிடமே போதும் என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெற வேண்டும்*
நமக்கு கோரிக்கைகள் பழுத்து கனியாகாத காரணம் இது மட்டுமே என்றால் அவற்றை முற்றிலும் அகற்றிடவே முக்கியத்துவம் தர. வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட மரியாதை குறைவாக ஆய்வுகூட்டங்களில் பேசுவதை கேட்ட உடன் அனைத்து AD நிலை அலுவலர்களும் ஒருங்கிணைந்து எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றுபட வேண்டும்.
நம்பிக்கை கொள்வோம்…
நமது செய்தி தளத்தில் வெளியிடும் இரண்டாவது கடிதம். கடிதத்தின் நியாயத்தை உணர்ந்து சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். சில மாவட்ட அதிகாரிகள் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்களாம்.அதிக வயது மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு உயிர் பயம் வந்துள்ளது.
சரியான நேரத்தில் மிக சரியாக எடுக்கும் முடிவே நியாயமான தீர்ப்பாக அமையும..