ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்களர் பட்டியலாம், அப்ப உள்ளாட்சி தேர்தல்?

உள்ளாட்சி தேர்தல்

  1. வேட்பு மனு தாக்கல் காலம் – 9 டிசம்பர் 2019 முதல் 16 டிசம்பர் 2019 வரை
  2. வேட்பு மனு ஆய்வு நாள் – 17 டிசம்பர் 2019
  3. வேட்பு மனு திரும்பப் பெறும் நாள் – 19 டிசம்பர் 2019
  4. தேர்தல் நாள் – 27 & 30 டிசம்பர் 2019

வாக்கு எண்ணிக்கை நாள் – 2 சனவரி 2020

மேலே உள்ள பட்டியல் கடந்த உள்ளாட்சி தேர்தலின் அட்டவணை.

ஜனவரி 11, 2019 அன்று மறைமுக தேர்தல் நடந்தது.ஆக மொத்தம் வரும ஜனவரி 10 வரை தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் உள்ளது.

அப்படியென்றால், வரும் டிசம்பரில் தேர்தல் வைக்கவேண்டும். அதற்கு அடிப்படையான இறுதி வாக்களர் பட்டியல் தேவை.

ஆன…வரும் ஜனவரி 6ம் தேதி தான்  இறுதி வாக்களர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் இன்றைய கூட்டத்தில் தெரிவித்து உள்ளது.

கூட்டி கழித்து பார்த்தால், உறுதியாக உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகிறது என்பது உறுதியாக தெரிகிறது. ஆக, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களில் 6மாதத்திற்கு அதிகாரிகள் கீழ் என்ற தீர்மானம் வரும்.

Also Read  நத்தத்தில் யுத்தம் -அரசியல் சண்டையால் பாதிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்

உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகுது…