ஊரடங்கில் உன்னத சேவை; பரிசளித்து போலீசார் நன்றி

உன்னத சேவை

ஊரடங்கில் உன்னத சேவை யாற்றும், போக்குவரத்து போலீசாருக்கு, 53 நாட்களாக தேநீர் வழங்கிய, தனியார் நிறுவன ஊழியருக்கு, போலீசார் பரிசளித்து பாராட்டு தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச், 24, நள்ளிரவு முதல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டனர்.

இது, வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.திருவொற்றியூர் போக்aகுவரத்து போலீசாருக்கு, எல்லையம்மன் கோவில் சந்திப்பைச் சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியரான சரவணன் மற்றும் நிஷாந்தினி ஆகியோர், கடந்த, 53 நாட்களாக, வீட்டிலேயே தயாரித்த தேநீர், கப சுர குடிநீர், ஜூஸ் வழங்கி வந்துள்ளனர்.

மேலும், வீட்டில் தயாரித்த, தானியங்கி கிருமி நாசினி இயந்திரத்தையும், போக்குவரத்து போலீசாருக்கு வழங்கியுள்ளனர்.

இவர்களின் தன்னார்வத்தை பாராட்டி, போக்குவரத்து போலீசார், அவர்களுக்கு பரிசளித்து, நன்றி தெரிவித்தனர்.

பேரிடர் காலங்களில், துளிர்க்கும் மனித நேயம். இந்த சுகாதார பேரிடரிலும் வெளிப்பட்டுள்ளதை, இந்த சம்பவம் பறைசாற்றியுள்ளது.

எங்கள் முகநூல் பக்கம்                                                               மேலும் செய்திகளுக்கு

Also Read  பாதூர் ஊராட்சியில் பல்வேறு நடவடிக்கைகள்