நாகமங்கலம் ஊராட்சி /Nagamangalam Panchayat
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது நாகமங்கலம். இந்த ஊராட்சி, அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2904 ஆகும். தற்போதைய நிலவரப்படி 3101 பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெண்கள் 1600 பேரும் ,ஆண்கள் 1501 பேரும் உள்ளனர்.
நாகமங்கலம் சோழநாட்டை சேர்ந்த பகுதியாகும். இந்நகரின் சங்க கால பெயர் சோழ பேரரசியார் வானவன்மாதேவி என்பவரின் பெயரால் வானவன்மாதேவி சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்படுகிறது. இந்நகரில் பிரசித்தி பெற்ற சோழர் காலத்து சிவன்கோவில் ‘அம்பிகாபதி’ எனும் பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக அரசுகாரன் கோட்டை, பட்டட்டாங்குறிச்சி, கணக்கம்பாளையம், கஞ்சிலிக்கொட்டாய், தெற்குகுடிசல் ஆகிய பகுதிகள் உள்ளன.