மணிவிழுந்தான் ஊராட்சி

மணிவிழுந்தான் ஊராட்சி /Manivilundan Panchayat

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது மணிவிழுந்தான். இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 10031 ஆகும். தற்போதைய நிலவரப்படி 11432 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 5833 பேரும் ஆண்கள் 5498 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சியை உள்ளடக்கிய பகுதிகளான ராமசேஷபுரம், சக்தி நகர், வசந்தபுரம், வடக்கு புதூர், முட்டல், ரெட்டிக்கரடு, தெற்கு புதூர், மணிவிழுந்தான் வடக்கு எஸ்.சி., கோவலன் கரடு, எம்.ஜி.ஆர். நகர், எக்ஸ் – சர்வீஸ்மென் காலனி, ராசி நகர், மணிவிழுந்தான் கடலூர் மெயின் ரோடு, மணிவிழுந்தான் வடக்கு மேற்கு, கொமாரபாளையம், நேரு நகர், பூமரத்துப்பட்டி, ராமானுஜபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன.

Also Read  சேலம் ஓமலூர் ஒன்றியத்தில் தொடரும் ஊழல்