எனக்கு பாதி,நீங்க மீதி அடித்து ஆடும் பிடிஓ- ஒற்றர் ஓலை

என்ன செய்தி ஒற்றரே…

சிவங்கை மாவட்டத்தில் ஒரு பிடிஓ இருக்கிறார். எந்த பில் போனாலும் எனக்கு பாதி,மீதி உங்களுக்கு என டீல் பேசி வசூலிப்பதில் கில்லாடியாம்.

அத்யாவசிய பணியிலுமா கல்லா கட்டுவது நடக்கிறது ஒற்றரே…

குண்டூசி வாங்கினாலும் கொடுத்தால் மட்டுமே பில் பாசாகுமாம்…அதைவிட கொடுமை,அதே துறையில் பாணியாற்றுபவரின் உறவினருக்கு பணிக்கான உத்தரவிற்கு கூட கைமேல் காசு இல்லாமல் கையெழுத்து போட மறுத்த உத்தமராம் மேற்படி நபர்.

அவர்மீது யாரும் இதுவரை குற்றம் கூறவில்லையா ஒற்றரே…

பழைய மாவட்ட ஆட்சியரிடம் கூட அவரை பற்றி புகார் கூறினார்களாம். இவர் மீது நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் அந்த ஆட்சி தலைவருக்கு மாறுதல் உத்தரவு வந்துவிட்டதாம்.

அதிஷ்டக்கார ஆள்போல ஒற்றரே..

ஆமாம் தலைவா…தனக்கு கீழ் பணிபுரியும் அலுவலர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவாராம். அப்படி பேசிய ஆடியோ கூட இருக்கிறதாம். விரைவில் வெடிக்கும் என்கின்றனர்.

யார் அவர்,பெயர் என்ன ஒற்றரே…

திரைப்பட இயக்குநர் ஒருவரின் இணை இயக்குநரின் பெயர் கொண்டவர் அவர். யார் என யோசித்துக்கொண்டே இருங்கள்,அடுத்த சந்திப்பில் பெயரை கூறுகிறேன் என சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  தலைவாசல் ஒன்றிய பெண் மண்டல துணை அலுவலர்களின் அடாவடி வசூல் -ஒற்றர் ஓலை